கவுகாத்தி : இந்திய - ஆஸ்திரேலிய இடையேயான டி20 தொடரின் 3வது போட்டி இன்று (நவம்பர் 28) கவுகாத்தி பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட் செய்ய களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் விளையாடினார்.
கடந்த போட்டியில் நல்ல தொடக்கத்தை கொடுத்த ஜெய்ஸ்வால் இப்போட்டியில் களத்தில் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பெஹ்ரன்டோர்ஃப் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களம் புகுந்த இஷான் கிஷன் டக் அவுட் ஆக, கெய்க்வாட்டுடன் - சூர்யகுமார் யாதவ் கைக்கோர்த்தார்.
-
Glenn Maxwell equals record for fastest ton by Australian in men's T20Is 🔥#INDvAUS | 📝: https://t.co/YiETbPxJ32 pic.twitter.com/1yjVy2lkMH
— ICC (@ICC) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Glenn Maxwell equals record for fastest ton by Australian in men's T20Is 🔥#INDvAUS | 📝: https://t.co/YiETbPxJ32 pic.twitter.com/1yjVy2lkMH
— ICC (@ICC) November 28, 2023Glenn Maxwell equals record for fastest ton by Australian in men's T20Is 🔥#INDvAUS | 📝: https://t.co/YiETbPxJ32 pic.twitter.com/1yjVy2lkMH
— ICC (@ICC) November 28, 2023
இந்த ஜோடி சிறுது நேரம் அணிக்கு ரன்களை சேர்த்து வந்தது. ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்தாலும், கெய்க்வாட் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 29 பந்துகளில் 2 சிக்சர்கள், 5 ஃபோர்கள் உட்பட 39 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் ஆரோன் ஹார்டி பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
-
A Glenn Maxwell special leads Australia to a crucial win in a thrilling run-chase 👊#INDvAUS | 📝: https://t.co/EH7foKCSti pic.twitter.com/OTqP2NdWBE
— ICC (@ICC) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A Glenn Maxwell special leads Australia to a crucial win in a thrilling run-chase 👊#INDvAUS | 📝: https://t.co/EH7foKCSti pic.twitter.com/OTqP2NdWBE
— ICC (@ICC) November 28, 2023A Glenn Maxwell special leads Australia to a crucial win in a thrilling run-chase 👊#INDvAUS | 📝: https://t.co/EH7foKCSti pic.twitter.com/OTqP2NdWBE
— ICC (@ICC) November 28, 2023
மறுபக்கம் தொடர்ந்து அதிரடி காட்டிய கெய்க்வாட் சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான கெய்க்வாட் 123 ரன்களுடனும், திலக் வர்மா 31 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
-
Sealed with a six! 💥
— ICC (@ICC) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A maiden T20I hundred for Ruturaj Gaikwad 💯#INDvAUS | 📝: https://t.co/VhkB7z4ruD pic.twitter.com/MjFQydvm3c
">Sealed with a six! 💥
— ICC (@ICC) November 28, 2023
A maiden T20I hundred for Ruturaj Gaikwad 💯#INDvAUS | 📝: https://t.co/VhkB7z4ruD pic.twitter.com/MjFQydvm3cSealed with a six! 💥
— ICC (@ICC) November 28, 2023
A maiden T20I hundred for Ruturaj Gaikwad 💯#INDvAUS | 📝: https://t.co/VhkB7z4ruD pic.twitter.com/MjFQydvm3c
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக டிரவிஸ் ஹெட் மற்றும் ஆரோன் ஹார்டி விளையாட இந்த ஜோடி 4.1 ஓவர்கள் முடிவில் 47 ரன்கள் குவித்தது. அதன் பின் ஆரோன் ஹார்டி 16 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து ஹெட் 35 ரன், ஜோஸ் இங்கிலிஸ் 10 ரன், மார்கஸ் ஸ்டோனிஸ் 17 ரன், டிம் டேவிட் டக் அவுட் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
-
That's that from the third T20I, Australia win by 5 wickets.
— BCCI (@BCCI) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The five match series now stands at 2-1.#INDvAUS @IDFCFIRSTBank pic.twitter.com/3a2wbpIHPV
">That's that from the third T20I, Australia win by 5 wickets.
— BCCI (@BCCI) November 28, 2023
The five match series now stands at 2-1.#INDvAUS @IDFCFIRSTBank pic.twitter.com/3a2wbpIHPVThat's that from the third T20I, Australia win by 5 wickets.
— BCCI (@BCCI) November 28, 2023
The five match series now stands at 2-1.#INDvAUS @IDFCFIRSTBank pic.twitter.com/3a2wbpIHPV
ஆனால் இதற்கிடையில் 3 டவுனில் களம் இறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடி காட்டினார். அவருடன் விளையாடிய மேத்யூ வேட் சிறப்பாக ஆடினார். கடைசி இரண்டு ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 4 ஃபோர்கள் மற்றும் 1 சிக்ஸ்ர் அடித்து அணிக்கு வெற்றியை பெற்று தந்தனர்.
அதோடு மேக்ஸ்வெல் சதமும் விளாசினார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 225 ரன்கள் குவித்து த்ரில் வெற்றி பெற்றது. இருப்பினும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 4வது போட்டி வரும் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: ஹாக்கி விளையாட்டு போட்டியில் மதுரை ரயில்வே ஊழியர்கள் சாதனை!