டொமினிகா: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 12) டொமினிகாவில் உள்ள விண்ட்சர் பார்க் மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சூழல் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்காமல் 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதில் அஸ்வின் 5 விக்கெட்களையும், ஜடேஜா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அடுத்ததாக தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 30 ரன்களும், ஜெய்ஸ்வால் 40 ரன்களும் எடுத்து களத்தில் நிலைத்து நின்றனர். இதனை தொடர்ந்து இரண்டாவது நாளில் பொறுமையாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித், ஜெய்ஸ்வால் இருவருமே சதம் அடித்தனர்.
ரோஹித் சர்மா 103 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த கில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் வாரிக்கன் பந்து வீச்சில் அவுட் ஆனார். அதன் பின் களம் கண்ட விராட் கோலி ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார்.
இரண்டாம் நாள் முடிவில் ஜெய்ஸ்வால் 14 பவுண்டரிகளுடன் 143 ரன்களும், விராட் கோலி 1 பவுண்டரி உடன் 36 ரன்களும் எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர். இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 162 ரன்கள் முன்னிலை வகிப்பத்து குறிப்பிடத்தக்கது.
சாதனைகள்: 350: அறிமுக போட்டியில் சதம் அடித்திருக்கிறார் ஜெய்ஸ்வால். மேலும், அறிமுக போட்டியில் இந்தியாவிற்காக 350 பந்துகளை விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக அசாரூதின் 322 பந்துகள் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
அறிமுக போட்டியில் ஷிகர் தவான் 187 ரன்கள் அடித்ததே இந்தியாவின் அறிமுக வீரரின் அதிகபட்ச ரன்களாக இருக்கிறது. அதை ஜெய்ஸ்வால் முறியடிப்பாரா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
229 பாட்னர்ஷிப்: தொடக்க வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் 229 ரன்கள் அடித்தது இதுவே முதல் முறை. முன்னதாக 2006ல் சேவாக் - வாசிம் ஜாபர் 159 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
8500 ரன்கள்: விராட் கோலி டெஸ்ட்டில் 8500 ரன்களை கடந்துள்ளார். இதுவரை டெஸ்ட்டில் இந்தியாவிற்காக 5 பேட்டர்கள் 8500 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Ind Vs WI : வீறுநடைபோடும் இந்தியா... அதிரடி காட்டும் யாஸ்வி... மீளுமா வெஸ்ட் இண்டீஸ்!