ETV Bharat / sports

IND Vs WI T20: இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி.. 2-0 புள்ளி கணக்கில் முன்னிலை! - பூரன்

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

a
a
author img

By

Published : Aug 6, 2023, 11:08 PM IST

Updated : Aug 7, 2023, 6:41 AM IST

கயானா: இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி கயானாவில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த நிலையில், அவர் 51 ரன்னில் அவுட்டானார்.

இஷான் கிஷன் 27, ஹர்திக் பாண்ட்யா 24 ரன்னும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அகீல் ஹொசைன், அல்ஜாரி ஜோசப், ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர், 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக வீசினார். முதல் பந்தில் பிராண்டன் கிங்கை அவுட்டாக்கினார்.

அதனைத் தொடர்ந்து 4வது பந்தில் ஜான்சன் சார்லசை வெளியேற்றினார். கைல் மேயர்ஸ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 4-ஆவது விக்கெட்டுக்கு நிகோலஸ் பூரனுடன் ரோவ்மன் பாவெல் ஜோடி சேர்ந்தார். பூரன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். இந்த ஜோடி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாவெல் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு ஏதிரான டி20 தொடர்: அயர்லாந்து அணி அறிவிப்பு!

அடுத்ததாக பூரன் 67 ரன்னில் வெளியேறினார். 16-ஆவது ஓவரை சஹல் வீசினார். முதல் பந்தில் ஷெப்பர்ட் ரன் அவுட்டானார். 4-ஆவது பந்தில் ஹோல்டர் ஸ்டம்ப்ட் அவுட்டானார். 6-ஆவது பந்தில் ஹெட்மயர் எல் பி டபிள்யூ முறையில் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 8 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி 4 ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற 24 ரன்கள் தேவைப்பட்டது. 17-ஆவது ஓவரில் 3 ரன்னும், 18-ஆவது ஓவரில் 9 ரன்னும் எடுத்தனர். இறுதியில், அந்த அணி அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரில் 2-0 என அந்த அணி முன்னிலையில் உள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி... பாகிஸ்தான் அரசு!

Last Updated : Aug 7, 2023, 6:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.