ETV Bharat / sports

50வது சதம் விளாசி சாதனை படைப்பாரா கிங் கோலி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 1:07 PM IST

Virat Kohli: உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டமான 45வது போட்டியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் மோதுகின்றன.

Virat kohli
விராட் கோலி

பெங்களூரு: உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மதியம் 2 மணிக்குத் தொடங்குகிறது. இதில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி இதுவரை விளையாடி 8 போட்டிகளிலும் அபாரமான வெற்றியைப் பதிவு செய்து, அரையிறுதியை உறுதி செய்ததுடன், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து ராஜ நடை போட்டு வருகிறது.

கிங் கோலி: இந்த வெற்றிகள் அனைத்திலும் இந்தியாவின் ரன் மிஷின் விராட் கோலி ரன்கள் குவித்து வருகிறார். குறிப்பாக, கடைசியாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம், கிரிக்கெட் ஜாம்பவானான சச்சினின் சாதனையை சமன் செய்தார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் 543 ரன்கள் குவித்து, இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவதாக கேப்டன் ரோகித் ஷர்மா 442 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், இன்று நடைபெறும் 45வது லீக் போட்டியானது விராட் கோலியின் ஹோம் கிரவுண்ட் ஆன சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த மைதானத்தில் உலக கிரிக்கெட் முதல் உள்ளூர் கிரிக்கெட் வரை கோலி நிறையப் போட்டிகளை விளையாடியுள்ளார். இதனால் இன்றைய போட்டியில் 50வது சதம் விளாசி, ரசிகர்களுக்கு தீபாவளி பரிசைக் கொடுப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபி: கிரிக்கெட் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கப்பட்ட 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடின.

இதில் அபாரமாக ஆடிய இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், இத்தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வியையேச் சந்திக்காத இந்திய அணி, 16 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

அதேபோல் நெதர்லாந்து அணியைப் பொறுத்தவரையில், 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய அணியாகக் கருதப்பட்டாலும், இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தினால், நெதர்லாந்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: இலங்கை அரசாங்கத்தின் தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை இடைநீக்கம் செய்தது ஐசிசி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.