ETV Bharat / sports

கேப்டன்சி.. ரன் வேட்டையில் ஜொலிக்கும் ரோகித் சர்மாவின் ஆட்டம் தொடருமா..!

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் 100 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக இருந்து வரும் ரோகித் சர்மா அதிக வெற்றிகளை வென்று குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்து உள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 11:02 AM IST

Rohit Sharma
ரோகித் சர்மா

மும்பை: 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 33வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சீசனில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

கேப்டன்சியில் ஜொலிக்கும் ரோகித்: டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் 100 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக இருந்து வரும் ரோகித் சர்மா அதிக வெற்றி சதவீதம் பெற்று, இந்திய கேப்டன்களிலே முதல் இடத்தில் உள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு செந்தக்காரரான ரோகித் சர்மா, தனி நபரின் அதிகபட்ச ரன் குவிப்பாக, கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முறையாக, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 1,193 ரன்கள் அடித்துள்ளார். அதைத் தொடர்ந்து 2017, 2018, 2019, 2023 என 5 முறை ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்து உள்ளார்.

கேப்டன் ரோகித் சர்மாவிற்கும், வான்கடே மைதானத்திற்கும் நீண்ட தொடர்பு உள்ளது என்றே கூறலாம். ஏனெனில் மும்பை வான்கடே மைதானம், அவரது செந்த மைதானம் ஆகும். இதனால் இன்று (நவ. 2) இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அவரது ரன் வேட்டை தொடருமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 66.33 சராசரியுடன் 398 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 2 ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றுள்ளார். முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது "நான் வான்கடே மைதானத்தில் பெற்ற பயிற்சியால் தான் இன்று சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

ஒருநாள் உலகக் கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி என்பது முக்கியம்,

அதிலும் குறிப்பாக நெட் ரன்ரேட் அவசியம் என்ன என்பதை புரிந்து கொண்டு, ஒவ்வொரு அணியும் புதிய யுக்திகளை கையாண்டு விளையாடி வருகின்றன. உலகக் கோப்பை போட்டிகள் பாதிக் கட்டத்தை கடந்து விட்ட நிலையில் இன்னும் சில போட்டிகளில் நாக் அவுட் சுற்றுக்கு செல்ல இருக்கும் 4 அணிகள் எவை என்பது தெரிந்து விடும்.

இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வென்று அரையிறுதி சுற்றில் கால் பதித்துவிட்டது இருப்பினும் இன்றைய போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி அதிகாரப்பூர்வமாக அரையிறுதி சுற்று உறுதி செய்யப்படும்.

இதையும் படிங்க: India Vs Srilanka : இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா இலங்கை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.