பெங்களூரு: ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரின் நேற்றைய போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது.
-
Look who's on top 👀👑✅
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
And all five are set to feature in the #CWC23 semi-finals 🤯
More #CWC23 stats 🔢 https://t.co/HEPMdZQumg pic.twitter.com/UoMwPC0JI4
">Look who's on top 👀👑✅
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 13, 2023
And all five are set to feature in the #CWC23 semi-finals 🤯
More #CWC23 stats 🔢 https://t.co/HEPMdZQumg pic.twitter.com/UoMwPC0JI4Look who's on top 👀👑✅
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 13, 2023
And all five are set to feature in the #CWC23 semi-finals 🤯
More #CWC23 stats 🔢 https://t.co/HEPMdZQumg pic.twitter.com/UoMwPC0JI4
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தனது அதிரடியான பந்து வீச்சால் நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் (Scott Edwards) விக்கெட்டை வீழ்த்தி விராட் கோலி சாதனை புரிந்தார்.
-
A Diwali special from Virat Kohli 👆#CWC23 | #INDvNEDhttps://t.co/9cCpjn98HF
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A Diwali special from Virat Kohli 👆#CWC23 | #INDvNEDhttps://t.co/9cCpjn98HF
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 12, 2023A Diwali special from Virat Kohli 👆#CWC23 | #INDvNEDhttps://t.co/9cCpjn98HF
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 12, 2023
இந்த போட்டியில் மூன்று ஓவர்கள் மட்டுமே விராட் கோலிக்கு வழங்கப்பட்ட நிலையில், 13 ரன்கள் விட்டுக் கொடுத்து 25வது ஓவரில் நெதர்லாந்து அணியின் கேப்டன் விக்கெட்டை வீழ்த்தினார். இதுவரை நடந்த கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்கு பந்து வீச 5வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டதும், அவர் விக்கெட் வீழ்த்தியதையும் ரசிகர்கள் கொண்டாடினர்.
முன்னதாக, கடந்த 2011ஆம் ஆண்டு விராட் கோலிக்கு பந்து வீச வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. அந்த ஆட்டத்தில் விராட் கோலி அதிரடியாக பந்து வீசி முதன்முறையாக எதிர் அணியின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார்.
-
India finish the #CWC23 group stage without a loss 🎇#INDvNED 📝: https://t.co/i4XroN43Ss pic.twitter.com/vp3KyuwGS6
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India finish the #CWC23 group stage without a loss 🎇#INDvNED 📝: https://t.co/i4XroN43Ss pic.twitter.com/vp3KyuwGS6
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 12, 2023India finish the #CWC23 group stage without a loss 🎇#INDvNED 📝: https://t.co/i4XroN43Ss pic.twitter.com/vp3KyuwGS6
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 12, 2023
அதன்பின் கடந்த 2013ஆம் ஆண்டு பந்து வீசி எதிர் அணியின் ஒரு விக்கெட்டையும், கடந்த 2014ஆம் ஆண்டு அதிரடியாக பந்து வீசி எதிர் அணியின் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 9 வருடங்கள் கழித்து நேற்றைய போட்டியில் தனது அதிரடி பந்து வீச்சால் நெதர்லாந்து அணியின் கேப்டன் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி நேற்றைய போட்டியில் 56 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து தனது அரை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் விராட் கோலி, 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மொத்தமாக 71 அரை சதத்தையும், 49 சதத்தையும் பதிவு செய்து உள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டியில், இதுவரை இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் மொத்தமாக விராட் கோலி 594 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இதன் மூலம் அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இரண்டாவதாக, தென்னாப்பிரிக்கா அணி வீரர் குயின்டன் டி காக் உள்ளார்.
இதையும் படிங்க:ரோகித் சர்மா சாதனை முறியடிப்பு.. கே.எல்.ராகுல் கூறும் காரணம் என்ன?