ETV Bharat / sports

South Africa Vs Australia : முதல் வெற்றியை பெறும் முனைப்பில் ஆஸ்திரேலியா! தென் ஆப்பிரிக்கா தாக்குபிடிக்குமா? - உலக கோப்பை கிரிக்கெட்

World Cup Cricket 2023 : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், லக்னோவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் அப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Cricket
Cricket
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 11:29 AM IST

லக்னோ : 13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 ஆணிகள் விளையாடி வருகின்றன.

இதில் உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று (அக். 12) நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அதேபோல் கடந்த 7ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் (100 ரன்), வேன் டர் துசன் (108 ரன்) மற்றும் எய்டன் மார்க்ராம் (106 ரன்) ஆகியோர் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

அதேபோன்ற கூட்டணி இன்றைய ஆட்டத்திலும் அமைந்தாலும் ஆஸ்திரேலிய அணிக்கு 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்படலாம். மற்றபடி கேப்டன் தேம்பா பவுமா உள்ளிட்டோரும் நன்றாக செயல்படும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் 400 ரன்களை எட்டும் என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல் தென் ஆப்பிரிக்க அணியில் பந்துவீச்சும் நல்ல நிலையில் உள்ளது. லுங்கி நிகிடி, மார்கோ ஜென்சன், கசிகோ ரபடா, கேசவ் மகராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இவர்கள் அனைவரும் கடுமையான சவால் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டர் வரிசை, பலவீனமாக உள்ளது. கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதேபோல் சுழற்பந்துவீச்சிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பலவீனமாக உள்ளனர். மற்றபடி ஆஸ்திரேலியாவும் நெருக்கடியான சூழலையும் சமாளித்து விளையாடக் கூடிய நல்ல அணிதான். முதல் வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது வெற்றிக்காக தென் ஆப்பிரிக்க அணியும் இன்றைய ஆட்டத்தில் மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையும் படிங்க : India Vs Pakisan : சாதனையை தக்கவைக்குமா இந்தியா? அப்படி என்ன சாதனை தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.