ETV Bharat / sports

ஹிட் மேன் ரோகித்! அதிவேகமாக அதிக சிக்சர்கள்! இவ்வளவு சாதனைகள் இருக்கா? - கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

சர்வதேச கிரிக்கெட் அதிவேகமாக 554 சிக்சர்களை அடித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சாதனை படைத்து உள்ளார். அதிவேக சிக்சரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்து உள்ளார்.

Rohit Sharma
Rohit Sharma
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 12:20 PM IST

ஐதராபாத் : சர்வதேச கிரிக்கெட் அதிக சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் உள்பட முன்னாள் வீரர்கள் பலரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 5 சிக்சர்களை விளாசினார். முன்னதாக ஆப்கானிஸ்தன் வீரர் நவீன் உல் ஹக் வீசிய 8வது ஓவரில் ரோகித் சர்மா தனது மூன்றாவது சிக்சர் அடித்தார். இந்த சிக்சின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அதிவேகமாக 550 சிக்சர்களை கடந்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.

இதற்கு முன் இந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் தன் வசம் வைத்து இருந்தார். அதை தற்போது ரோகித் சர்மா முறியடித்து உள்ளார். 473 இன்னிங்சில் ரோகித் சர்மா 554 சிக்சர்கள் அடித்து உள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 550 சிகசர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.

மேலும் அதிவேகமாக 200, 400 மற்றும் 500 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்து இருப்பது. இதில் அதிவேகமாக 300 சிக்சர்கள் அடித்த சாதனையை மட்டும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தன் வசம் வைத்து உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக அதிக சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் தனது எக்ஸ் பக்கத்தில், ரோகித் சர்மாவுடன் இணைந்து 45 என்ற எண் பொறித்த ஜெர்சி அணிந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பாராட்டு தெரிவித்து உள்ளார். கிறிஸ் கெயிலை தொடர்ந்து, சுரேஷ் ரெய்னா, விரேந்திர சேவாக் ஆகியோரும் தங்களது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மாவின் சதம் அபாரமானது. அதேநேரம் ஆஸ்திரேலிய அணிக்கு ஆட்டத்திலும், ஆப்கானுக்கு எதிரான ஆட்டத்திலும் சரி விராட் கோலியின் விளையாட்டு மெச்சத்தக்க கூடிய வகையில் உள்ளது என்றும் இந்திய அணிக்காக விராட் கோலி அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்றும் முன்னாள் வீரர் சேவாக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க : India Vs Pakisan : சாதனையை தக்கவைக்குமா இந்தியா? அப்படி என்ன சாதனை தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.