ETV Bharat / sports

"சாதனை புத்தகத்தில் ஒரு பக்கத்தை மட்டுமே கிழித்துள்ளேன்" - ரோகித் சர்மா கூறியது யாரை? - Rohit break Chris Gayle record

World Cup 2023 : கிறிஸ் கெயில் என்ற சாதனை புத்தகத்தில் ஒரு பக்கத்தை மட்டுமே கிழித்து உள்ளேன் என்று அதிவேகமாக அதிக சிக்சர்கள் அடித்து கெயிலின் சாதனையை முறியடித்து குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வீடியோ வெளியிட்டு உள்ளார்.

Rohit
Rohit
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 3:21 PM IST

டெல்லி : கிறிஸ் கெயிலின் சாதனை புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தை கிழித்து உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து உள்ளார்.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (அக். 11) நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் வீசிய 8வது ஓவரில் ரோகித் சர்மா தனது மூன்றாவது சிக்சர் பறக்கவிட்டார். இந்த சிக்சரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அதிவேகமாக 550 சிக்சர்களை கடந்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.

இதற்கு முன் இந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் தன் வசம் வைத்து இருந்தார். அதை தற்போது ரோகித் சர்மா முறியடித்து உள்ளார். ஒருநாள், டி20, டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வடிவிலான போட்டிகளில் மொத்தம் 453 ஆட்டங்களில் களமிறங்கி உள்ள ரோகித் சர்மா இதுவரை 554 சிக்சர்கள் அடித்து உள்ளார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 550 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ரோகித் சர்மா 453 போட்டிகளில் 556 சிக்சர்களை அடித்து உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலை காட்டிலும் 30 ஆட்டங்களுக்கு முன்னதாகவே ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்து உள்ளார்.

மேலும் அதிவேகமாக 200, 400 மற்றும் 500 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்து இருப்பது. இதில் அதிவேகமாக 300 சிக்சர்கள் அடித்த சாதனையை மட்டும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தன் வசம் வைத்து உள்ளார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் சாதனை புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தை மட்டுமே தான் கிழித்து உள்ளதாக ரோகித் சர்மா தெரிவித்து உள்ளார்.

கிறிஸ் கெயில் இந்த பிரபஞ்சத்தின் சாதனை மனிதர் என்றும் அவரது சாதனை புத்தகத்தில் ஒரு பக்கத்தை கிழித்து உள்ளதாகவும் ரோகித் சர்மா கூறியுள்ளார். இத்தனை ஆண்டுகளில் அவர் எங்கு விளையாடினாலு, சிக்சர் அடிக்கும் இயந்திரம் போலவே விளையாடி உள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார்.

இருவரும் 45 என்ற எண் பொறித்த ஒரே ஜெர்சியை அணிந்து உள்ளதாகவும், 45 எண் ஜெர்சி சாதனை படைத்து இருப்பதால் கிறிஸ் கெயில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பார் என்றும் ரோகித் சர்மா பேசிய உள்ள வீடியோவை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.

இதையும் படிங்க : ஹிட் மேன் ரோகித்! அதிவேகமாக அதிக சிக்சர்கள்! இவ்வளவு சாதனைகள் இருக்கா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.