ETV Bharat / sports

BAN VS NZ: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் களமிறங்கும் கேன் வில்லியம்சன்! - ஐசிசி

Cricket World Cup 2023: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் விளையாட தயாராக உள்ளார்.

Kane williamson
Kane williamson
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 4:36 PM IST

சென்னை: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 11வது லீக் போட்டியாக நியூசிலாந்து - வங்கதேசம் அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்த போட்டியில் அணியின் முன்னணி வீரரும், கேப்டனுமான கேன் வில்லியம்சன் வங்கதேசம் எதிரான அணி தேர்வுக்கு தயாராக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

கேன் வில்லியம்சன் நாளை நடக்க இருக்கும் போட்டி தேர்வுக்கு தயாராக உள்ளார் என நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கூறியுள்ளார். இந்த உலக கோப்பையில் நியூசிலாந்து அணி விளையாடிய இரு போட்டிகளிலுமே வில்லியம்சன் மற்றும் சவுதி ஆகியோர் விளையாடவில்லை. இந்த நிலையில் அவர் அணிக்கு திரும்புவது கூடுதல் பலமாகும். அதேநேரம் காயத்தில் இருந்து சரியாகி வரும் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியும் நாளை சென்னையில் நடக்க இருக்கும் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் பங்கேற்க்க போவதில்லை என கேன் வில்லியம்சன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; "காயத்தில் இருந்து மீண்டு உலகக் கோப்பை அணிக்குள் திருப்புவது மகிழ்ச்சியை தருகிறது. அதை எதிர்நோக்கி ஆர்வமுடன் உள்ளேன். மேலும், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி காயத்தில் இருந்து நன்றாக முன்னேறி வருகிறார். அதே சமயம் நாளை வங்கதேசதிற்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார்" என அவர் கூறினார்.

இதையும் படிங்க: India Vs Pakisan : சாதனையை தக்கவைக்குமா இந்தியா? அப்படி என்ன சாதனை தெரியுமா?

சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியை வென்று அவர்களது வெற்றி பயணத்தை தொடர ஆர்வத்துடன் உள்ளனர். ஷாகிப் அல் ஹசனின் தலைமையிலான சுழற்பந்து விச்சின் சவாலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். வங்கதேசம் அணி இங்கிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் படுதோல்வியை சந்தித்தனர். அதில் இருந்து மீள்வதற்கு அந்த அணி முனைப்புடன் உள்ளனர்.

முன்னணி வீரரான கேன் வில்லியம்சன் கடந்த 2019 உலக கோப்பையில், நியூசிலாந்து அணியை வழிநடத்தினார். இறுதி போட்டி வரை சென்ற இந்த அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. 2010ஆம் ஆண்டில் சர்வதேச ஒருநாள் பயணத்தை தொடங்கிய கேன் வில்லியம்சன் இதுவரை 161 போட்டிகள் விளையாடியுள்ளார். அதில் அவர் 13 சதங்கள் மற்றும் 42 அரைசதங்கள் உள்பட 4,554 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பீகார் ரயில் விபத்து; 1,006 பயணிகளுடன் கவுகாத்திக்கு சிறப்பு ரயில் சேவை தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.