ETV Bharat / sports

இந்தியா-நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி.. கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்ற நபர் கைது!

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டிகளுக்கான டிக்கெட்டை கள்ளசந்தையில் கூடுதல் விலைக்கு விற்க முயன்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

black marketing World cup semi final tickets
India Vs New Zealand
author img

By ANI

Published : Nov 14, 2023, 10:16 AM IST

Updated : Nov 14, 2023, 12:28 PM IST

மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதிப் போட்டி நாளை (நவ.15) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்கான டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சோதனை மேற்கொண்ட போலீசார், கள்ளசந்தையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்த 30 வயது நபரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட நபர் மலாட் மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ் கோத்தாரி என்பதும்’ கள்ளச்சந்தையில் டிக்கெட்டை நிர்ணயிக்கபட்ட விலையை விட 4 முதல் 5 மடங்கு அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளனர். அதாவது 27 ஆயிரம் முதல் 2.5 லட்சம் வரை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு எதிரான சில ஆவணங்களும் கிடைத்துள்ளன.

இதனையடுத்து அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 420 மற்றும் 511-இன் கீழ் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த டிக்கெட்டுகளை அவர் எங்கிருந்து வாங்கினார் என்பது குறித்தும், இந்த மோசடியில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

2,500 முதல் 4,000 வரையிலான இந்தியா- நியூசிலாந்து உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட் 25,000 முதல் -50,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்ற தகவல் கிடைத்ததும், உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரையிறுதிப் போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டதால், ரசிகர்கள் மத்தியில் டிக்கெட்டுகளுக்கான மவுஸ் அதிகரித்துள்ளதால் இதனைப் பயன்படுத்தி கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்க முயல்கின்றனர். இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் நடந்த கொடூரம்..! காதல் விவகாரத்தில் இளைஞரை அடித்துக் கொன்ற ஐந்து பேர் கைது..!

Last Updated : Nov 14, 2023, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.