தர்மசாலா (இமாச்சலப்பிரதேசம்): ஐசிசி நடத்தும் உலக கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 26 லீக் ஆட்டங்களில் முடிவடைந்த நிலையில், இன்று அதன் 27வது லீக் ஆட்டம் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த ஆட்டம் இமாச்சலப்பிரதேசம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
-
Travis Head announced himself at #CWC23 in style 🙌
— ICC (@ICC) October 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
📺 Watch highlights: https://t.co/jPlZkhK7So pic.twitter.com/SJ8mrbcXCi
">Travis Head announced himself at #CWC23 in style 🙌
— ICC (@ICC) October 28, 2023
📺 Watch highlights: https://t.co/jPlZkhK7So pic.twitter.com/SJ8mrbcXCiTravis Head announced himself at #CWC23 in style 🙌
— ICC (@ICC) October 28, 2023
📺 Watch highlights: https://t.co/jPlZkhK7So pic.twitter.com/SJ8mrbcXCi
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் களம் இறங்கினர். இந்த கூட்டணி தொடக்கம் முதலே அதிரடியான அட்டத்தில் ஈடுபட்டது. இருவரும் அரைசதம் கடந்தனர். பவர்ப்ளே முடிவில் இந்த கூட்டணி 118 ரன்கள் சேர்த்தது.
-
Australia overcame a resilient fight from their Trans-Tasman rivals New Zealand to take two crucial #CWC23 points in Dharamsala 🔥#AUSvNZ 📝: https://t.co/eJ9oRPQkNA pic.twitter.com/n10xc8S8OO
— ICC (@ICC) October 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Australia overcame a resilient fight from their Trans-Tasman rivals New Zealand to take two crucial #CWC23 points in Dharamsala 🔥#AUSvNZ 📝: https://t.co/eJ9oRPQkNA pic.twitter.com/n10xc8S8OO
— ICC (@ICC) October 28, 2023Australia overcame a resilient fight from their Trans-Tasman rivals New Zealand to take two crucial #CWC23 points in Dharamsala 🔥#AUSvNZ 📝: https://t.co/eJ9oRPQkNA pic.twitter.com/n10xc8S8OO
— ICC (@ICC) October 28, 2023
இதன் மூலம் ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் முதல் 10 ஓவர்களில் அதிக ரன்கள் சேர்த்த இரண்டாவது அணி என்ற பெருமையை பெற்றது. முன்னதாக 2003 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி கனடா அணிக்கு எதிராக 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தகக்து.
டிரெண்ட் போல்ட், மாட் ஹென்றி, மிட்செல் சான்ட்னர் ஆகியோரால் பிரிக்க முடியாத இந்த கூட்டணியை பேட்டிங் ஆல்ரவுண்டரான க்ளென் பிலிப்ஸ் பிரித்தார். டேவிட் வார்னர் 81 ரன்கள் எடுத்த போது பிலிப்ஸிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஹெட் சதம் விளாசினார்.
-
Rachin Ravindra hits a sublime ton for his team in a tough chase against Australia 👊@mastercardindia Milestones 🏏#CWC23 | #AUSvNZ pic.twitter.com/ACmgfqdOZi
— ICC (@ICC) October 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rachin Ravindra hits a sublime ton for his team in a tough chase against Australia 👊@mastercardindia Milestones 🏏#CWC23 | #AUSvNZ pic.twitter.com/ACmgfqdOZi
— ICC (@ICC) October 28, 2023Rachin Ravindra hits a sublime ton for his team in a tough chase against Australia 👊@mastercardindia Milestones 🏏#CWC23 | #AUSvNZ pic.twitter.com/ACmgfqdOZi
— ICC (@ICC) October 28, 2023
23.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் எடுத்த நிலையில், பிலிப்ஸ் பந்து வீசிய பந்தில் ஹெட் போல்ட் ஆனார். அதனைத் தொடர்ந்து ஸ்மித் 18, மார்ஸ் 36, லபுசேன் 18, மேக்ஸ்வெல் 41, ஜோஸ் இங்கிலிஸ் 38 கம்மின்ஸ் 37 ரன்கள் என சீரான இடைவேளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்கள் முடிவில் 388 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பாக க்ளென் பிலிப்ஸ் மற்றும் டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்களையும், மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 389 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டெவான் கான்வே மற்றும் வில் யங் ஓவருக்கு 8 முதல் 9 ரன்கள் வரை எடுத்து சிறப்பாக விளையாடினர். ஆனால் சிறிது நேரம் மட்டுமே அவர்களால் களத்தில் நிலைக்க முடிந்தது. கான்வே 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வில் யங் 32 ரன்களுக்கு வெளியேறினார்.
அதன்பின் வந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்த வண்ணம் இருந்தனர். அரைசதம் கடந்த மிட்செல் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் டாம் லாதம் 21 ரன், க்ளென் பிலிப்ஸ் 12 ரன், மிட்செல் சான்ட்னர் 17 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், ரச்சின் ரவீந்திரா தொடர்ந்து சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.
வெற்றியை நோக்கி பயணித்த நியூசிலாந்து அணியில் சதம் அடித்த ரச்சின் ரவீந்திரா (116 ரன்) ஆட்டமிழந்த பின் சற்று தடுமாறியது. ஆனால் அணியின் வெற்றிக்காக ஜேம்ஸ் நீஷம் இறுதி வரை போராடினார். 58 ரன்கள் எடுத்த அவர், கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். இறுதியில் ஒரு பந்துக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நியூசிலாந்து அணியால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 383 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜம்பா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: மனதளவில் அன்றே ஓய்வு பெற்றுவிட்டேன்.. 2019 உலகக் கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்த தோனி!