ETV Bharat / sports

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா அணியை வென்றது மகிழ்ச்சி - கேப்டன் எட்வர்ட்ஸ் - Scott Edwards

Netherlands skipper: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வென்றது மகிழ்ச்சியாக உள்ளது என நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

elighted-to-beat-south-africa-netherlands-captain-edwards-says
தென் ஆப்பிரிக்கா அணியை வென்றது மகிழ்ச்சி - கேப்டன் எட்வர்ட்ஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 12:47 PM IST

தர்மசாலா: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் மழை குறுக்கிட்டதால் 7 ஓவர்கள் குறைக்கப்பட்டு, 43 ஓவர்கள் என்ற முறையில் போட்டியானது நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங் ஆடிய நெதர்லாந்து அணி, 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் 78 ரன்களை குவித்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, மார்கோ ஜான்சன், லுங்கி என்கிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியினர், நெதர்லாந்து அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 207 ரன்கள மட்டுமே எடுக்க முடிந்தது .இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.

எட்வர்ட்ஸ் பெருமிதம்: போட்டி குறித்து நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறுகையில், “நாங்கள் அதிக எதிர்பார்ப்புகளுடன் வந்தோம். எங்கள் அணியில் நல்ல வீரர்கள் உள்ளார்கள். உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக எங்கள் அணி வெற்றி பெற்றதில் பெருமையாக உள்ளது.

தற்போது வரை நாங்கள் நல்ல நிலையில் உள்ளோம். வரும் போட்டிகளில் வெற்று பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. போட்டி நடைபெறுவதற்கு முன் சில ஆராய்ச்சிகளைச் செய்தோம். அது போட்டியில் வெற்றி பெறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. ஏராளமான ரசிகர்கள் கடைசி வரை இருந்து, எங்கள் வெற்றியைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

  • வரலாற்று வெற்றி: 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணியிடம் தென் ஆப்ரிக்கா அணி வீழ்வது இதுவே முதல் முறையாகும்.
  • தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தியது மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் 3வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது நெதர்லாந்து அணி.
  • முன்னதாக 2003ஆம் ஆண்டு ப்ளூம்ஃபோன்டைன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நமீபியாவை 64 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
  • அதேபோல், 2007ஆம் ஆண்டு பாஸெட்டரே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்தை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: NZ VS AFG: ஆப்கானிஸ்தான் ஆட்டம் நியூசிலாந்திடம் பலிக்குமா..? சென்னையில் இன்று பலப்பரீட்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.