ETV Bharat / sports

IN vs WI: சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் மகாராணிகள்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன் பீரித் கவுர் தலா ஒரு சதம் அடித்து அசத்தினர்.

icc-women-world-cup-2022-in-vs-wi-live-score

author img

By

Published : Mar 12, 2022, 12:38 PM IST

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து நாட்டின் ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்க தேசம், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோற்றது. இன்று(மார்ச் 12) மூன்றாவது ஆட்டத்தை ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக விளையாடி வருகிறது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா 119 பந்துகளுக்கு 123 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 107 பந்துகளுக்கு 109 ரன்களும் விளாசி அபார இரட்டை சதத்தை கொடுத்து அணிக்கு வலுசேர்த்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சாளர் அனிஷா முகமது 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து 318 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மேற்கிந்திய தீவுகள் அணி வீராங்கனைகள் களமிறங்கி விளையாடிவருகின்றனர்.

இதையும் படிங்க: புதிய சாதனை படைத்த மிதாலி ராஜ்... ரசிகர்கள் உற்சாகம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.