ETV Bharat / sports

2024 - டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு.. ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

T20 World Cup 2024: 2024ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று (ஜன.05) வெளியிட்டுள்ளது.

icc-released-fictures-for-mens-t20-world-cup-2024
2024 - டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு.. ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் மோதல்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 10:28 PM IST

துபாய்: 2024 - டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, கனடா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த நிலையில், 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று (ஜன.05) வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 1ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸில் தொடங்கும் இத்தொடர் ஜூன் 29ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸின் பார்படாஸில் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Get ready for the ultimate cricket carnival in the West Indies and the USA 🥁

    Unveiling the fixtures for the ICC Men’s T20 World Cup 2024 🗓️ 🤩#T20WorldCup | Details 👇

    — T20 World Cup (@T20WorldCup) January 5, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல், இத்தொடரில் பங்கேற்கும் 20 அணிகள் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குருப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-யில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் ஆகிய அணிகளும், குரூப் சி-யில் நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும், குரூப் டி-யில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு குழுவில் உள்ள அணிகளும் தலா ஒரு முறை தங்களது குழுவில் உள்ள அணியுடன் மோத வேண்டும். லீக் சுற்றின் இறுதியில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டிடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இதிலிருந்து 4 அணிகள் அரையிறுதி போட்டிக்குச் செல்லும். இத்தொடரின் முதல் போட்டியில், அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன.

குரூப் சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியாக ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் 9ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஜூன் 12ஆம் தேதி அமெரிக்காவுக்கு எதிராகவும், ஜூன் 15ஆம் தேதி கனடாவுக்கு எதிராகவும் விளையாடுகிறது. மேலும், 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரக்ஞானந்தாவை நேரில் பாராட்டிய கௌதம் அதானி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.