துபாய் : ஐசிசி தரவரிசை பட்டியல் துபாயில் இன்று (ஜூலை 14) வெளியானது.
பந்துவீச்சை பொறுத்தமட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஃபபியன் ஆலன் 10ஆவது இடத்திற்குள் முன்னேறியுள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் இரண்டு இடங்கள் முன்னேறி 22ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
டூவைன் பிராவோ 7 இடங்கள் முன்னேறி 37ஆவது இடத்தில் உள்ளார். ஒபேட் மெக்கோய் 15 இடங்கள் முன்னேறி 38ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
பேட்டிங்கை பொறுத்தவரை 26 வயதான பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், இந்திய கேப்டன் விராத் கோலி இரண்டாம் இடத்திலும் உள்ளனர். பாபர் அசாம் 873 புள்ளிகள் பெற்றுள்ளார். அவரை விட விராத் கோலி 16 புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.
ஒரு நாள் தொடர்
மூன்றாவது இடத்தில் உள்ள ரோகித் சர்மா 825 புள்ளிகள் பெற்றுள்ளார். ஒருநாள் போட்டியில் 119 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலியா (118), மூன்றாம் இடத்தில் இந்தியா (115), அடுத்ததடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்கா (103), பாகிஸ்தான் (93), வங்க தேசம் (90), வெஸ்ட் இண்டீஸ் (82), இலங்கை (77) உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
டெஸ்ட்டில் இந்தியா முதலிடம்
-
Fabian Allen breaks into the top 10 of the @MRFWorldwide ICC T20I Player Rankings for bowling 📈
— ICC (@ICC) July 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
He has jumped up 16 spots!
Full rankings ➡️ https://t.co/H7CnAiw0YT pic.twitter.com/DxgQzoUs1Z
">Fabian Allen breaks into the top 10 of the @MRFWorldwide ICC T20I Player Rankings for bowling 📈
— ICC (@ICC) July 14, 2021
He has jumped up 16 spots!
Full rankings ➡️ https://t.co/H7CnAiw0YT pic.twitter.com/DxgQzoUs1ZFabian Allen breaks into the top 10 of the @MRFWorldwide ICC T20I Player Rankings for bowling 📈
— ICC (@ICC) July 14, 2021
He has jumped up 16 spots!
Full rankings ➡️ https://t.co/H7CnAiw0YT pic.twitter.com/DxgQzoUs1Z
10ஆவது இடத்தில் 62 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் உள்ளது. டெஸ்ட் அணியை பொறுத்தவரை இந்தியா (119) முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து ஆஸ்திரேலியா (108), இங்கிலாந்து (107), பாகிஸ்தான் (94), தென் ஆப்பிரிக்கா (88), வெஸ்ட் இண்டீஸ் (78), இலங்கை (78), வங்க தேசம் (49) மற்றும் ஜிம்பாப்வே (31) உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
டி-20 போட்டிகள்
20க்கு 20 ஓவர் (டி-20) போட்டி தரவரிசையிலும் இந்திய அணி 272 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 263 புள்ளிகளுடன் நியூசிலாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளன.
தொடர்ந்து பாகிஸ்தான் (261), ஆஸ்திரேலியா (249), தென் ஆப்பிரிக்கா (245), ஆப்கானிஸ்தான் (236), வெஸ்ட் இண்டீஸ் (234), இலங்கை (225) உள்ளிட்ட நாடுகள் உள்ளன. 10ஆவது இடத்தில் 225 புள்ளிகளுடன் வங்கதேசம் உள்ளது.
அஸ்வின் இரண்டாம் இடம்
பேட்டிங்கை பொறுத்தமட்டில் டெஸ்ட்டில் முதலிடத்தில் கனே வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபூஸ்லேனே மற்றும் விராத் கோலி உள்ளனர்.
டெஸ்ட் பவுலிங்கை பொறுத்தவரை ரவிசந்திர அஸ்வின் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதலிடத்தில் பேட் கம்மின்ஸ் உள்ளார்.
மிதாலி ராஜ்
டெஸ்ட் ஆல்ரவுண்டரில் ஜேசன் ஹோல்டர் முதலிடத்தில் உள்ளார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணியை பொறுத்தவரை 164 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 119 புள்ளிகளுடன் இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும், 118 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா மூன்றாவது இடத்திலும், 110 புள்ளிகளுடன் இந்தியா 4ஆவது இடத்திலும், நியூசிலாந்து 93 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் உள்ளன.
மிதாலி ராஜ் 762 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டி-20யில் மூன்றாம் இடம் வகிக்கிறது.
இதையும் படிங்க : 'கிரிக்கெட் டூ கிராண்ட்ஸ்லாம்' விம்பிள்டனை கைப்பற்றிய ஆஷ்லே பார்ட்டி