மும்பை: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், துபாயில் டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. முன்னதாக அணிகளுக்கு இடையில் வீரர்களை மாற்றிக் கொள்ளும் டிரேட் முறை நடைபெற்றது. அதன்படி, சில அணிகள் தங்களது வீரர்களை மாற்றிக் கொண்டன.
-
📢 Announced!
— IndianPremierLeague (@IPL) November 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
𝗛𝗮𝗿𝗱𝗶𝗸 𝗣𝗮𝗻𝗱𝘆𝗮 ➡️ 𝗠𝘂𝗺𝗯𝗮𝗶 𝗜𝗻𝗱𝗶𝗮𝗻𝘀
𝗖𝗮𝗺𝗲𝗿𝗼𝗻 𝗚𝗿𝗲𝗲𝗻 ➡️ 𝗥𝗼𝘆𝗮𝗹 𝗖𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗲𝗿𝘀 𝗕𝗮𝗻𝗴𝗮𝗹𝗼𝗿𝗲#IPL pic.twitter.com/oyuAtP7Q27
">📢 Announced!
— IndianPremierLeague (@IPL) November 27, 2023
𝗛𝗮𝗿𝗱𝗶𝗸 𝗣𝗮𝗻𝗱𝘆𝗮 ➡️ 𝗠𝘂𝗺𝗯𝗮𝗶 𝗜𝗻𝗱𝗶𝗮𝗻𝘀
𝗖𝗮𝗺𝗲𝗿𝗼𝗻 𝗚𝗿𝗲𝗲𝗻 ➡️ 𝗥𝗼𝘆𝗮𝗹 𝗖𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗲𝗿𝘀 𝗕𝗮𝗻𝗴𝗮𝗹𝗼𝗿𝗲#IPL pic.twitter.com/oyuAtP7Q27📢 Announced!
— IndianPremierLeague (@IPL) November 27, 2023
𝗛𝗮𝗿𝗱𝗶𝗸 𝗣𝗮𝗻𝗱𝘆𝗮 ➡️ 𝗠𝘂𝗺𝗯𝗮𝗶 𝗜𝗻𝗱𝗶𝗮𝗻𝘀
𝗖𝗮𝗺𝗲𝗿𝗼𝗻 𝗚𝗿𝗲𝗲𝗻 ➡️ 𝗥𝗼𝘆𝗮𝗹 𝗖𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗲𝗿𝘀 𝗕𝗮𝗻𝗴𝗮𝗹𝗼𝗿𝗲#IPL pic.twitter.com/oyuAtP7Q27
இதனையடுத்து, அணைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் (நவ. 26) நேற்று சமர்பித்தது. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, தன்னை முதன் முதலில் அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்புவதாக செய்திகள் கடந்த சில நாட்களாக தீயாய் பரவி வந்தன.
இதற்கு முடிவுகட்டும் விதமாக குஜராத் டைட்டன்ஸ் அணி, அவர்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் ஹர்திக் பாண்டியாவே அந்த அணிக்கு கேப்டனாக தொடர்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நட்சத்திர நாயகன் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியதாக ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
-
This brings back so many wonderful memories. Mumbai. Wankhede. Paltan. Feels good to be back. 💙 #OneFamily @mipaltan pic.twitter.com/o4zTC5EPAC
— hardik pandya (@hardikpandya7) November 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This brings back so many wonderful memories. Mumbai. Wankhede. Paltan. Feels good to be back. 💙 #OneFamily @mipaltan pic.twitter.com/o4zTC5EPAC
— hardik pandya (@hardikpandya7) November 27, 2023This brings back so many wonderful memories. Mumbai. Wankhede. Paltan. Feels good to be back. 💙 #OneFamily @mipaltan pic.twitter.com/o4zTC5EPAC
— hardik pandya (@hardikpandya7) November 27, 2023
இதனை உறுதி செய்யும் விதமாக ஹர்திக் பாண்டியா தனது டிவிட்டர் பக்கத்தில் பழைய நினைவுகளை பகிரும் விதமாக வீடியே ஒன்றைப் பதிவிட்டு மீண்டும் மும்பை அணிக்கு திரும்புவது மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார். அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ட்ரேடிங் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவலும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதனையடுத்து குஜராத் டைட்டன்ஸ் தங்களுடைய அணிக்கு புதிய கேப்டனாக இந்திய இளம் வீரர் சுப்மன் கில்லை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் நீண்ட காலம் தங்கள் அணியை வழிநடத்த ஒரு கேப்டனை ஆரம்பத்திலேயே தைரியமாக முடிவு செய்து இருக்கிறது. மேலும் வெளியேறிய ஹர்திக் பாண்டியாக்கு "நல்ல நினைவுகளை தந்ததற்கு நன்றி. உங்களுடைய அடுத்த பணிகள் சிறக்கட்டும்" என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வாழ்த்தி இருக்கிறது.
இதையும் படிங்க: India Vs Aus : இந்தியா அபார வெற்றி! இந்திய பந்துவீச்சில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா!