ETV Bharat / sports

Hardik Pandya: நியூசிலாந்து ஆட்டத்தில் ஹர்திக் விலகல்? ஷமியா? சூர்யகுமாரா? யாருக்கு வாய்ப்பு? - இந்தியா நியூசிலாந்து

Hardik Pandya to miss match against New Zealand இடது கணுக்கால் காயத்திற்கு ஓய்வு எடுக்கக் கூறி மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா விளையாட மாட்டார் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் முகமது ஷமி அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் கூறப்பட்டு உள்ளது.

Hardik Pandya
Hardik Pandya
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 1:28 PM IST

புனே : இடது கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து பூரண குணமடையாத நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்த்திக் பாண்ட்யா விளையாட வாய்ப்பில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்து உள்ளார்.

13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நேற்று (அக். 19) நடைபெற்ற 17வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடின. டாஸ் வென்று வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதில், ஆட்டத்தின் 9வது ஓவரை ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வீசினார்.

முதல் 3 பந்துகளை அவர் வீசிய நிலையில், திடீரென வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. காயத்தால் தவித்த அவர், அப்படிய மைதானத்தில் அமர்ந்தார். இதையடுத்து இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பரிசோதனை மேற்கொண்டார். காயத்தின் வீரியம் அதிகமாக இருப்பதாக உணர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஹர்திக் பாண்ட்யாவை மைதானத்திற்கு வெளியே அழைத்துச் சென்றார்.

முதலில் காயத்தின் வீரியத் தன்மை குறித்து ஆராய்ந்த பிறகே ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்த ஆட்டங்களில் விளையாடுவாரா என்று பிசிசிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு ஸ்கேன் செய்யப்பட உள்ளதாகவும் ஸ்கேன் பரிசோதனைக்கு பின்னர் அணியில் அவர் இடம் பெறுவது குறித்து அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ கூறியது.

இந்நிலையில், வரும் 22ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா விளையாட மாட்டார் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்கேன் செய்து பார்த்ததில் ஹர்திக் பாண்ட்யா ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் குழு அறிவுறுத்தியதாகவும், அவர் பிசிசிஐயின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று (அக். 20) தர்மசாலா செல்ல உள்ள இந்திய அணியில் அவர் இடம் பெற மாட்டார் என்றும் வரும் 29ஆம் தேதி லக்னோவில் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்திய அணியில் இடம் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஹர்த்திக் பாண்ட்யா கலந்து கொள்ள முடியாத நிலையில் அவருக்கு பதிலாக முகமது ஷமி அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : Hardik Pandya : ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஸ்கேன் - பிசிசிஐ தகவல்! அஸ்வினா? ஷமியா? களமிறங்குவது யார்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.