ETV Bharat / sports

Australia vs Sri Lanka : முதல் வெற்றி யாருக்கு? ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதல்! - உலக கோப்பை கிரிக்கெட் 2023

World Cup Cricket : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் வெற்றிக்காக இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் இன்று லக்னோவில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Cricket
Cricket
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 12:56 PM IST

லக்னோ : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது.

13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றி விளையாடி வருகின்றன.

மொத்தம் 13 ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், எதிர்கொண்ட மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நடப்பு தொடர் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பல்வேறு திருப்புமுனைகளை எதிர்கொண்டு வருகிறது. நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

அதேநேரம் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, நடப்பு இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளின் போட்டிகள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்று கூறினாலும் அது மிகையாகாது. அந்த அளவுக்கு அந்த அணியின் செயல்பாடுகள் மோசமாக காணப்படுகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலிய அணி, தான் சந்தித்த இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

லக்னோவில் இன்று நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி வரும் ஆட்டங்கள் அனைத்திலும், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இனி வரும் போட்டிகள் அனைத்தும் ஆஸ்திரேலிய அணிக்கு இறுதிப் போட்டி போன்றது என அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்து உள்ளார்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டர் வரிசை அந்த அணிக்கு பலவீனமாக உள்ளது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழப்பதால் ஆஸ்திரேலிய அணி கடந்த இரண்டு ஆட்டங்களிலும் 200 ரன்களுக்கு வீழ்ந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையின் போதும் முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி அதன்பின் தொடர் வெற்றிகளை கண்டு அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவ் சுமித், மார்னஸ் லபுக்சேன் கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்ட வெற்றியை தீர்மானிக்கக் கூடிய வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரை கேப்டன் பேட் கம்மின்ஸ், ஆடம் ஷம்பா, மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட் உள்ளிட்ட வீர்ரகள் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

இலங்கை அணியை பொறுத்தவரை இன்றைய ஆட்டத்தில் தசுன் சனகா இல்லாதது அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிக்கு இதுவரை நேருக்கு நேர் 103 முறை மோதி உள்ளது. அதில் ஆஸ்திரேலியா 63 முறையும், இலங்கை அணி 36 முறையும் வென்று உள்ளன. 4 ஆட்டங்கள் முடிவு கிடைக்காமல் போனது.

அதேபோல் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 11 முறை இலங்கை அணியை எதிர்கொண்டு உள்ள ஆஸ்திரேலியா, அதில் 8 முறை வெற்றி பெற்று உள்ளது. இரண்டு ஆட்டங்களில் இலங்கை அணியும், ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்காமலும் போனது. முதல் வெற்றிக்காக இரண்டு அணிகளும் மல்லுக்கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையும் படிங்க : மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து அணி! இதுல இவங்க தான் பர்ஸ்டாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.