ETV Bharat / sports

IND vs WI: இந்தியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்.. 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! - கிரிக்கெட் செய்தி’

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்
india vs west indies
author img

By

Published : Aug 4, 2023, 9:24 AM IST

டிரினிடாட்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று (ஆகஸ்ட் 03) டிரினிடாட் தரோபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி களம் இறங்கியது. இந்த போட்டியின் மூலம் வேகபந்து வீச்சாளர் முகேஷ் குமார் மற்றும் இடது கை பேட்டர் திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானர்கள்.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கைல் மேயர்ஸ் மற்றும் பிராண்டன் கிங் களம் முதலில் இறங்கினர். 4 ஓவர்கள் முடிவில் 28 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் சூழல் பந்து வீச்சில் அடுத்தடுத்து மேயர்ஸ் 1 ரன்னிலும், பிராண்டன் கிங் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் உட்பட 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த பூரான் அதே ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசி அவரது அதிரடியை தொடங்கினார்.

பின்னர் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் சார்லஸ் ஆட்டமிழக்க, அதனை தொடர்ந்து களம் இறங்கிய ரோவ்மேன் பவல் பூரானுடன் இணைந்து இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 96 எட்டிய நிலையில், பூரான் திலக் வர்மாவிடம் கேச் கொடுத்து அவுட் ஆனார்.

அதன் பின் ஹெட்மேயர் 10 ரன்களிலும், ரோவ்மேன் பவல் 48 ரன்களிலும் வெளியேறினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், சாஹல் தலா 2 விக்கெட்களும், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

அதன் பின் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறக்கிய இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவரிகள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 39, சூர்ய குமார் யாதவ் 21, ஹர்திக் பாண்டியா 19, அக்சர் படேல் 13, சஞ்சு சாம்சன் 12 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர், மெக்காய், ஷெப்பர்ட் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 06) கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி: சீனாவை துவம்சம் செய்த இந்தியா அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.