12-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா மார்ச் 23-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதனால் தீவிர பயிற்சியில் இருஅணி வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியின்போது, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. காயத்திற்கு நான்கு வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் ஐபிஎல் தொடரிலிருந்து லுங்கி இங்கிடி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இவருக்கு பதிலாக வேறொரு வேகப்பந்துவீச்சாளர்களை சென்னை அணி நிர்வாகம் தேடி வருகிறது.