ஜம்மு காஷ்மீரின் புல்மாவா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலினால் 44 பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத சம்பவத்தினால் நாடே அதிர்ச்சியில் உறைந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிக்கும் விதமாக, இந்திய அணி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில்,
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாட்டத்தில் நடந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் நடந்தது என்னால் நம்ப முடியவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அரசு நிச்சயம் தக்க நடவடிக்கை எடுக்கும். இதன் விளைவாக, வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதக் கூடாது, என்றார்.
பாகிஸ்தானுடன் போட்டியிடாமலே இந்திய அணி உலக கோப்பை தொடரை வெல்லும். அந்த அளவிற்கு இந்திய அணி வலிமையான அணியாகவும் திகழ்கிறது. கிரிக்கெட் என்று இல்லாமல், எந்த ஒரு விளையாட்டிலும் பாகிஸ்தானுடன் எந்தவித தொடர்பையும் இந்தியா வைக்க கூடாது என தெரிவித்தார்.இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி வரும் ஜூன் 16ஆம் தேதி இங்கிலாந்தின் மான்சஸ்டரில் நடைபெறவுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் ஒளிப்பரப்பு உரிமத்தை ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.