இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், நான்காவது டி20 போட்டி இன்று (மார்ச் 18) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்திய அணிக்கு வாழ்வா, சாவா? என்ற இப்போட்டியில், வெற்றியை நிர்ணயிக்கும் டாஸை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஈயான் மோர்கன் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்துள்ளார்.
இன்றையப் போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷானுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவும், சாஹலுக்குப் பதிலாக ராகுல் சஹருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ராகுல் சஹர், ஷர்துல் தாக்கூர்.
இங்கிலாந்து அணி: ஈயன் மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், டேவிட் மாலன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், கிறிஸ் ஜோர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷித், மார்க் வுட்.
தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்தும், தொடரில் தன்னை இருத்திக்கொள்ள இந்தியாவும் தீவிரமாக விளையாடும் என்பதால் இன்றையப் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.