ETV Bharat / sports

மகளிர் டி20 உலகக்கோப்பை: இறுதி போட்டிக்குள் நுழைந்த தென் ஆப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

eng vs sa women t20 full score and results

author img

By

Published : Feb 24, 2023, 10:48 PM IST

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டி நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (பிப்.24) நடந்தது. இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 55 பந்துகளுக்கு 68 ரன்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தார். அதேபோல லாரா வோல்வார்ட் 44 பந்துகளுக்கு 53 ரன்களையும், மரிசான் காப் 13 பந்துகளுக்கு 27 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அந்த வகையில், 165 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரரான டேனி வியாட் 30 பந்து பந்துகளுக்கு 34 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சோபியா டன்க்லி 16 பந்துகளுக்கு 28 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 3ஆவதாக களமிறங்கிய ஆலிஸ் கேப்ஸி ரன்களின்றி ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த நாட் ஸ்கிவர்-ப்ரன்ட் நிதானமாக ஆடி வந்தார். மறுப்புறம் கேப்டன் ஹீதர் நைட் அவருக்கு பக்கபலமாக ஆடினார். இருப்பினும் முறையே 40, 31 ரன்களுடன் இருவரும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வீராங்கனைகள் அனைவரும் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைத்தனர். அதன்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்க அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஆஸ்திரேலியா உடன் பிப்.26ஆம் தேதி மோதுகிறது.

இதையும் படிங்க: 80ஆவது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற சென்னை வீரர் விக்னேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.