ETV Bharat / sports

'வீ ஆர் சாம்பியன்ஸ்' : தமிழ் மக்களுக்கு பிராவோவின் தமிழ் 'ட்விட்' - CHENNAI SUPER KINGS

கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதைக் கண்டு மனம் வருந்துவதாக, சிஸ்கேவின் நட்சத்திர வீரர் டூவைன் பிராவோ கூறியுள்ளார்.

DWAYNE DJ BRAVO, டூவைன் பிராவோ, டூவைன் பிராவோ டான்ஸ்
dwayne-dj-bravo-tweet-about-covid-cases-in-tamilnadu
author img

By

Published : May 23, 2021, 7:09 AM IST

Updated : May 23, 2021, 8:12 AM IST

சென்னை: மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டூவைன் பிராவோ என்று அறிமுகப்படுத்துவதை விட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிராவோ என்றே இவரை சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் தனது பெயரை 'டாட்டூ'-வாக பதித்துவிட்டார் டூவைன் பிராவோ. தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு ரசிகர்களையும் அதிகம் கொண்டாடக்கூடியவர் தான் பிராவோ.

இந்நிலையில், கரோனா இரண்டாம் அலை தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதை அறிந்த டூவைன் பிராவோ, நேற்று (மே.22) தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதில் இருந்து விரைவில் மீள மாநில விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவுடன் வீடியோ ஒன்றை இணைத்து தமிழ் மக்களுக்கு கரோனா விதிகளை பின்பற்றுமாறும், வாய்ப்பிருந்தால் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

'சாம்பியன்' டான்ஸரான டிஜே பிராவோ, சித்திரம் பேசுதடி - 2 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி கோலிவுட்டிலும் கால்பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கீர்த்தி சுரேஷ்!

Last Updated : May 23, 2021, 8:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.