ETV Bharat / sports

இது போன்ற அணியை நான் எதிர்பார்க்கவில்லை - கோலி - உலகக் கோப்பை இந்திய அணி

கொல்கத்தா: உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு எதிர்பார்த்தைவிட நல்ல அணி கிடைத்துள்ளதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கோலி
author img

By

Published : Apr 19, 2019, 3:08 PM IST

12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை (15.4.19) அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய அணியின் தேர்வு குறித்து விராட் கோலி கூறுகையில்,

அந்நிய மண்ணில் நாங்கள் சிறப்பாகவே ஆடியுள்ளோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல அணியே எங்களுக்கு கிடைத்துள்ளது. அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் அனைவரது எதிர்பார்ப்பும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதில்தான் உள்ளது என்றார்.

இந்திய அணி விவரம்: கோலி(கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான்,கே.எல்.ராகுல், தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், சாஹல்

இந்திய அணியில் நான்காவது வரிசையில் பேட்டிங் செய்வதற்காக கே.எல்.ராகுல், விஜய் சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. அதேசமயம், தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது.இப்போட்டி ஜூன் 5ஆம் தேதி சவுத்ஹாம்டன் நகரில் நடைபெறவுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.