ETV Bharat / sports

தினேஷ் கார்த்திக்கு அனுபவம் இருக்கு ரிஷப் பந்துக்கு டைம் இருக்கு - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்

அனுபவத்தின் காரணத்தால்தான் தினேஷ் கார்த்திக்கிற்கு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய அணித் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்கு அனுபவம் இருக்கு ரிஷப் பந்துக்கு டைம் இருக்கு
author img

By

Published : Apr 16, 2019, 12:31 PM IST

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக இளம் வீரர் ரிஷப் பந்த் இடம்பெறுவாரா இல்லை அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருந்த சூழலில் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கின் தேர்வு குறித்து இந்திய அணித் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூறுகையில், “இக்கட்டான தருணத்திலும் எந்தவித அழுத்தமுமின்றி சிறப்பாக ஆடக்கூடியவர் தினேஷ் கார்த்திக். இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் அவர் பலமுறை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிபெற செய்துள்ளார். இதனால்தான் அவர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

ரிஷப் பந்த் திறமையான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடிக்காமல் போனது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் இந்திய அணியில் இடம்பிடிக்க அவருக்கு போதுமான நேரம் உள்ளது” என்றார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.