ETV Bharat / sports

ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகவும் பிடித்த இந்திய மைதானம் எது தெரியுமா?

ICC Cricket World Cup 2023: லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை 3வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.

cricket-world-cup-afghanistans-love-affair-with-ekana-stadium
இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் ஹோம் கிரவுண்ட் எது தெரியுமா....
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 10:57 AM IST

லக்னோ: உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இந்திய அணிக்குப் பிறகு அதிக போட்டிகளை விளையாடிய அணி என்ற பெருமை ஆப்கானிஸ்தானுக்கு உள்ளது. தாலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் விளையாட முடியாமல் போனது.

இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவில் சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதித்தது. இதனையடுத்து, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியது. ஏகானா மைதானத்தில் நடந்த ஒரே டெஸ்ட் போட்டி இதுதான்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் செல்வாக்கு அதிகமாக இருந்ததால், அங்கு உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட சாத்தியமில்லை என உணர்ந்த ஆப்கானிஸ்தான் அணி, தங்களுக்காக ஒரு சொந்த மைதானத்தை தேடினர். அப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2018ஆம் ஆண்டில் பிசிசிஐயிடம் இதற்காகக் கோரியபோது, முதலில் உத்தரகாண்ட், டேராடூனில் உள்ள மைதானம், அதன் பிறகு, கிரேட்டர் நொய்டாவில் (உத்தரப்பிரதேசம்) உள்ள மைதானமும் ஆப்கானிஸ்தானின் சொந்த மைதானமாக சில காலம் இருந்தது.

பின்னர், லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியம் தேர்வு செய்யப்பட்டது. இந்த மைதானம் உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கத்தால் (UPCA) கட்டப்பட்டுள்ளது. கான்பூரில் உள்ள பசுமை பூங்காவிற்குப் பிறகு மாநிலத்தில் உள்ள இரண்டாவது சர்வதேச மைதானம் இதுவாகும்.

இங்கு ஆப்கானிஸ்தான் அணி, பல சர்வதேச போட்டிகளில் விளையாடியது. 2019ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 1 டெஸ்ட் போட்டி என மொத்தம் 7 போட்டிகளில் அணி விளையாடியுள்ளது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஆப்கானிஸ்தானில் இருந்தும் ஏராளமான கிரிகெட் ரசிகர்கள் லக்னோவிற்கு வந்து தங்களுடைய அணிக்கு ஆதரவு அளித்தனர். இருப்பினும், 2019க்குப் பிறகு, துபாய் ஆப்கானிஸ்தானின் சொந்த மைதானமாக மாற்றப்பட்டது.

இது குறித்து வாஜ்பாய் ஸ்டேடியத்தின் இயக்குநர் உதய் குமார் சின்ஹா கூறியதாவது, “ஸ்டேடியத்தின் ஏற்பாடுகளில் ஆப்கானிஸ்தான் அணி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. ஆடுகளம் முதல் விருந்தோம்பல் வரை, வீரர்கள் எந்த பிரச்னையையும் சந்தித்ததில்லை. அவர்கள் இங்கு பல சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளனர்” என தெரிவித்தார்.

லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா (EKANA) சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும். ஒரே நேரத்தில் 50,000 ரசிகர்கள் வரை அமரக்கூடிய இது, நாட்டின் மூன்றாவது பெரிய மைதானமாகவும், இருக்கை வசதியின் அடிப்படையில் உலகின் ஆறாவது பெரிய மைதானமாகவும் அமைகிறது. அதேபோல இந்தியாவில் நீண்ட ஸ்ட்ரெய்ட் பவுண்டரி தூரம் கொண்ட ஸ்டேடியமாக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலகக் கோப்பை கிரிக்கெட்: 3வது லீக் ஆட்டத்தில் இன்று வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் மோதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.