லக்னோ: ஐசிசி உலக கோப்பை தொடரின் 18 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நாளை நடைபெறும் 19வது லீக் போட்டியில் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் மோதவுள்ளன. இந்த போட்டியானது லக்னோவில் ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினாலும், மூன்றாவது போட்டியில், பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பாண்டு உலக கோப்பை தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது நெதர்லாந்து அணி. அதுமட்டுமல்லாமல் இந்த வரலாற்று வெற்றியின் மூலம் முன்னனி அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 69 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும், பந்து வீச்சில் ரோலோஃப் வான் டெர் மெர்வே மற்றும் லோகன் வான் பீக் சிறப்பாக செயல்பட்டனர்.
மறுபக்கம் குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி நடப்பாண்டு உலக கோப்பையில் இன்னும் வெற்றியை ருசிக்கவில்லை. என்னதான் இந்த அணி பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினாலும், பந்து வீச்சில் சொதப்புவதால் அவர்களால் வெற்றியை பெற முடியாமல் போகிறது.
மேலும், முக்கிய சுழற்பந்து வீச்சாளர் வநிந்து ஹாசரங்கா காயம் காரணமாக அணியில் இல்லாதது இவர்களது தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இப்படி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை, எப்படியாவது நாளை வெற்றி பெற்று தங்களது வெற்றி கணக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நடைபெறும் நேரம் மற்றும் இடம்: காலை 10.30 மணி & ஏகனா கிரிக்கெட் மைதானம்.
நேருக்கு நேர்
மோதிய போட்டிகள் - 5
இலங்கை - 5
நெதர்லாந்து - 0
கணிக்கப்பட்ட இரு அணிகளுக்கான பிளேயிங் 11
இலங்கை: பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (விகீ & கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லலகே, சாமிக்க கருணாரத்ன, மஹீஸ் தீக்ஷன, லஹிரு குமார அல்லது கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க.
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (விகீ & கேப்டன்), லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.
இதையும் படிங்க: World Cup 2023: பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்த வார்னர் - மார்ஸ் ஜோடி!