ஹைதரபாத்: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியாக ஆஸ்திரேலியா அணியை வரும் 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியுடன் தனது முதல் போட்டியை இந்திய மோதுவதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. இதனால் இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது கேள்வி கூறியாகி உள்ளது. சமீபகாலமாக நல்ல ஃபார்மில் உள்ள இவர் இந்த ஆண்டு விளையாடிய 20 ஒருநாள் போட்டிகளில் 1,230 ரன்களை இந்தியாவுக்காக குவித்துள்ளார்.
சுப்மன் கில்லின் சராசரி 72.35ஆக உள்ளது. குறிப்பாக கடைசி 4 ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் அரைசதங்கள் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கில் இல்லாத பட்சத்தில் தொடக்க வீரராக கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன் அல்லது கே.எல்.ராகுல் களம் காண்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்க வீரராக இஷான் கிஷன் விளையாடிய 5 போட்டிகளில் 3 அரைசதங்கள் விளாசியுள்ளார். மேலும், காயத்தில் இருந்த கே.எல்.ராகுல் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆசிய கோப்பையில் களம் புகுந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார். இவர் இதுவரை தொடக்க வீரராக விளையாடிய 23 போட்டிகளில் 915 ரன்கள் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: உலகக் கோப்பை கிரிக்கெட் 2வது லீக் போட்டி: நெதர்லாந்துக்கு 287 ரன்கள் இலக்கு!