கொல்கத்தா: ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தொடரின் 37வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். இந்த கூட்டணி நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை என்றாலும், தொடக்கமே அணிக்கு ரன்களை சேர்த்து வெளியேறியது. முதலில் ரோகித் சர்மா 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
-
Innings break!
— BCCI (@BCCI) November 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
An excellent batting display from #TeamIndia as we set a 🎯 of 3⃣2⃣7⃣
Over to our bowlers 💪
Scorecard ▶️ https://t.co/iastFYWeDi#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvSA pic.twitter.com/Fje5l3x3sj
">Innings break!
— BCCI (@BCCI) November 5, 2023
An excellent batting display from #TeamIndia as we set a 🎯 of 3⃣2⃣7⃣
Over to our bowlers 💪
Scorecard ▶️ https://t.co/iastFYWeDi#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvSA pic.twitter.com/Fje5l3x3sjInnings break!
— BCCI (@BCCI) November 5, 2023
An excellent batting display from #TeamIndia as we set a 🎯 of 3⃣2⃣7⃣
Over to our bowlers 💪
Scorecard ▶️ https://t.co/iastFYWeDi#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvSA pic.twitter.com/Fje5l3x3sj
அவரை தொடர்ந்து சுப்மன் கில் 23 ரன்களில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் - விராட் கோலி ஜோடி சேர, இந்த கூட்டணி அணிக்கு நிதானமான முறையில் ரன்களை சேர்த்து வந்தது. இருவரும் அரைசதம் கடக்க, பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்தது.
ஒரு கட்டத்தில் ஸ்ரேயாஸ் 77 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் வந்த கே.எல்.ராகுலும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்தாலும், விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்துள்ளது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 49 சதம் விளாசிய சச்சினின் சாதனையைத் தனது பிறந்தநாளான இன்று விராட் கோலி சமன் செய்து உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஷம்சி, மகாராஜ், ரபாடா, என்கிடி, மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
-
Pure class in the city of Joy ✨
— BCCI (@BCCI) November 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Incredible knock from Virat Kohli 👏👏#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvSA pic.twitter.com/pRZWHLGm0W
">Pure class in the city of Joy ✨
— BCCI (@BCCI) November 5, 2023
Incredible knock from Virat Kohli 👏👏#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvSA pic.twitter.com/pRZWHLGm0WPure class in the city of Joy ✨
— BCCI (@BCCI) November 5, 2023
Incredible knock from Virat Kohli 👏👏#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvSA pic.twitter.com/pRZWHLGm0W
இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் இன்னிங்ஸின் தொடக்கம் முதலே இந்தியாவின் கைகளே ஓங்கி இருந்தது. சிறப்பான பந்து வீச்சின் மூலம் விக்கெட்களை தொடர்ச்சியாக வீழ்த்தி வந்தனர். டி காக் 5, பவுமா 11, வென் டர் டுசென் 13, மார்க்ரம் 9, ஹென்ரிச் கிளாசென் 1, மார்கோ ஜான்சன் 14 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்தியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெட்களும், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர். இதனால் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: Shreyas Iyer: "என் மகன் ஷார்ட் பால் எதிர்கொள்ள திணறலா?" - ஸ்ரேயாஸின் தந்தை சந்தோஷ் ஐயர் பதில் என்ன?