ETV Bharat / sports

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : காலியான கிங் கோலி; குஷியில் நியூசி.,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நிதானம் காட்டிவந்த இந்திய கேப்டன் கோலி 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.

விராட் கோலி அவுட்
விராட் கோலி அவுட்
author img

By

Published : Jun 20, 2021, 4:17 PM IST

Updated : Jun 20, 2021, 4:33 PM IST

சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (ஜுன் 20) அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது. இந்திய கேப்டன் விராட் கோலி 44 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹோனே 29 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர்.

இன்-ஸ்விங்கிற்கு பலி

இந்நிலையில், கைல் ஜேமீசன் 68ஆவது ஓவரை வீச வந்தார். ஆஃப்-ஸ்டெமிற்கு வெளிப்புறமாக வீசப்பட்ட ஜேமீசனின் முதல் மூன்று பந்துகளை, கோலி தடுப்பாட்டத்தால் எதிர்கொண்டார்.

இம்மூன்று பந்துகளுக்கு பின், நல்ல லெங்த்தில் ஒரு இன்-ஸ்விங் டெலிவரியை வீசினார் ஜேமீசன். இதை லெக்-திசையில் அடிக்க முயன்ற கோலி, இன்றைய நாளில் தனது ரன் கணக்கை தொடங்காமல் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். விராட் கோலிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும், இந்த டீப் இன்-ஸ்விங் பந்தை நேர்த்தியாக வீசி அவரின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் ஜேமீசன்.

தொடர்ந்து மிஸ்ஸாகும் 71...

இதனால், ஏறத்தாழ ஒன்றரை வருடமாக தனது 71ஆவது சதத்தைப் பதிவு செய்ய காத்துக்கொண்டிருந்த கோலி இம்முறை அரைசதத்தைக் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ஜேமீசன் vs கோலி

கடந்த 2020ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடரில்தான் ஜேமீசன் அறிமுகமானார். அத்தொடரின் முதல் போட்டியிலும், கோலியை ஜேமீசன்தான் விக்கெட் எடுத்தார் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: WTC FINAL: தாமதமாகும் கோலியின் அரை சதம்; மைதானத்தில் ஈரப்பதம்

Last Updated : Jun 20, 2021, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.