ETV Bharat / sports

உலகக்கோப்பை: லாஸ்ட் ட்ரை...அரையிறுயில் நுழையுமா பாகிஸ்தான்? - world cup 2019

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி இன்று பலபரீட்சை நடத்துகிறது.

cricket
author img

By

Published : Jul 5, 2019, 10:04 AM IST

இங்கிலாந்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெற்றுவரும் உலகக்கோப்பைத் தொடர் ஏறக்குறைய இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில், புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் பார்த்தால் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணி ஆகியவை தகுதி பெற்றுள்ளன. இருப்பினும் 11 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி இன்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சாத்தியமில்லாத ஒரு சாதனையை படைத்தால் மட்டுமே அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் நிலை உள்ளது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் வீழ்ந்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றிபெற்றது. இருப்பினும் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியது.

எனினும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து நாங்க திரும்ப வந்துட்டோம் என நிரூபித்தது. ஆனால் பாகிஸ்தான் அணியின் நெட் ரன்ரேட் விகிதம் குறைவாக இருந்ததால், அரையிறுதிக்கு தகுதிபெற பிற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டது.

cricket
பாகிஸ்தான் அணி

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா, நியூசிலாந்து அணிகள் தோல்வியுற்றதால், பாகிஸ்தான் அணி அரையிறுதி செல்லும் வாய்ப்பு பறிக்கப்பட்டு விட்டது என்று கூறலாம். இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 350க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து, வங்கதேசத்தை 311 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் என்பது நிபந்தனை. அதிலும் வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தால், பாகிஸ்தான் அணியின் கனவு பந்துவீசுவதற்கு முன்பாகவே கலைக்கப்பட்டுவிடும் என்பதே நிதர்சனமான உண்மை.

cricket
பாகிஸ்தான் அணி

எதிரணியான வங்கதேச அணி இந்தத் தொடரில் பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது. அந்த அணி தென் ஆப்பிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை எளிதாக வீழ்த்தியது. அதுமட்டுமல்லாமல் அந்த அணியின் பேட்ஸ்மேன்களான தமீம் இக்பால், சர்க்கார், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், முஷ்பிஷூர் ரஹிம் உள்ளிட்ட அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஷகிப் அல் ஹசன் 7 போட்டிகளில் 2 சதங்கள், 4 அரைசதங்கள் உட்பட 542 ரன்களை குவித்து மிரட்டி வருகிறார்.

எனவே இன்றைய போட்டியில் வெற்றியோடு வீடு திரும்பும் நோக்கில் வங்கதேச அணியுடன் பாகிஸ்தான் அணி ஏதேனும் மாயம் நிகழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Intro:Body:

CWC19: BAN vs PAK preview

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.