ETV Bharat / sports

விஜய் சங்கர் காயம் - இந்திய அணியில் குழப்பம்

author img

By

Published : Jun 20, 2019, 5:47 PM IST

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

vijay shankar

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. இதுவரை நான்கு போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி மூன்று வெற்றி, மழை காரணமாக ஒரு போட்டி ரத்து என ஏழு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார். அப்போட்டியில், விஜய் சங்கர் 15* ரன்களும், பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதிலும் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றி இந்திய அணியின் விக்கெட் வேட்டையை தொடங்கிவைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டடிக்காக நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விஜய் சங்கரின் கால் கட்டை விரலை பூம்ரா வீசிய யார்க்கர் பந்து பதம் பார்த்தது.

இதனால் வலியால் துடித்த விஜய் அங்கிருந்து பாதியிலேயே வெளியேறினார். அவர் இன்று நடைபெற்ற வலைப்பயிற்சிலும் பங்கேற்காமல் இருந்துள்ளார். எனவே விஜய் சங்கர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னதாக நேற்று ஷிகர் தவான் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் அடுத்த மூன்று போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஆல்-ரவுண்டரான விஜய் சங்கருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் இந்திய அணியில் மாற்று வீரர்களை களமிறக்க குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/business/economy/know-the-team-behind-budget-2019-2019-2019-2019/na20190619094439067

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.