2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மிகவும் விறுவிறுப்பாக ஒவ்வொரு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளில் 5-யில் வெற்றிபெற்றும், ஒன்றில் தோல்வியும் அடைந்தது. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணிக்கு நான்காவது வீரராக களமிறங்கி வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்றையப் போட்டியில் விளையாடவில்லை. இதனையடுத்து இன்று உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து விஜய் சங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்க ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஷிகர் தவான் காயம் காரணமாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது.