ETV Bharat / sports

CWC19: இது ஒன்றும் யுத்தம் இல்லை! - உலகக்கோப்பை2019

இது ஒன்றும் யுத்தம் இல்லை என இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார்.

வாசிம் அக்ரம்
author img

By

Published : Jun 16, 2019, 8:40 AM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் நட்சத்திர அணிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டி உலகக்கோப்பைத் தொடரின் மிகச்சிறந்த போட்டியாக இருக்கப் போகிறது என கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே எந்த விளையாட்டில் என்ன போட்டி நடைபெற்றாலும் இந்த சூழல்தான்.

சாதாரணமாக கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்காதவர்களும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆடுகிறதென்றால், பார்ப்பதற்கு முன்பதிவு செய்ததுபோல் அமர்ந்துவிடுவார்கள். அதற்கான காரணம், போட்டியில் ஆடும் வீரர்களுக்கு ஆக்ரோஷம் இருக்கும் என்பதெல்லாம் தாண்டி இரு நாடுகளுக்கு இடையேயான சூழல்.

ஒருவேளை இன்றையப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால், விராட், தோனி உள்ளிட்ட இந்திய வீரர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்படும். அந்தச் சூழல் ஒரு விளையாட்டு வீரருக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என ரசிகர்களிடம் கோரப்பட்டுள்ளது.

வாசிம் அக்ரம்
வாசிம் அக்ரம்

இன்றையப் போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் பேசுகையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது மிகச்சிறந்த விஷயம். இந்த சமயத்தில் ரசிகர்களுக்கு ஒரே வேண்டுகோள்தான். அது என்னவென்றால், விளையாட்டு என்றால் ஒரு அணி வெற்றிபெறும். ஒரு அணி தோல்வியடையும். விளையாட்டை பார்க்கும் ரசிகர்களாகி அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். இது ஒன்றும் யுத்தம் இல்லை. யுத்தமாகப் பார்ப்பவர்கள் நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களே கிடையாது.

யார் இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவார்கள் என்றால், இன்றைய ஆட்டத்தில் அழுத்தத்தை யார் சிறப்பாக கையாள்கிறார்களோ அவர்கள்தான் வெற்றிபெறுவார்கள் என்றார்.

மேலும் இன்றைய ஆட்டத்தை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் 10 நிமிட இடைவேளை நேரத்திற்கு ரூ. 35 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் டிக்கெட்டுகள் அனைத்தும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், கள்ளச் சந்தையில் டிக்கெட்டுகள் அதிகமான விலைக்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Intro:Body:

IND vs PAK

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.