ETV Bharat / sports

இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்லும் நியூசிலாந்து! - INDVSNZ

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

cricket
author img

By

Published : Jul 10, 2019, 7:38 PM IST

Updated : Jul 10, 2019, 10:35 PM IST

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து சேஸிங்கை தொடங்கிய இந்திய அணி 4ஆவது ஓவரிலேயே 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின்னர் வந்த வீரர்கள் சொதப்பினாலும் தொடர்ந்து நிலைத்து ஆடிய தோனி-ஜடேஜா இணை சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தது.

எனினும் இறுதிக் கட்டத்தில் அவர்களின் விக்கெட்டை நியூசிலாந்து வீரர்கள் கைப்பற்றியதால் இந்திய அணியை 49.3 ஓவரில் 221 ரன்களுக்குள் சுருட்டியது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 18 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து செல்கிறது.

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 10, 2019, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.