கிரிக்கெட் திருவிழாவான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலாகலமாக முடிந்துள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பவுண்டரிகள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் வெற்றிபெற்று, உலகக்கோப்பையை முதல்முறையாக வென்றுள்ளது. இந்த தொடரில், பல வீரர்கள் சிறப்பாக விளையாடி உலகிற்கு தங்களது திறமையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர்.
இந்த தொடரில் கெத்துக் காட்டிய 11 வீரர்கள் கொண்ட கனவு அணியை ஐசிசி தனது அதிகார்வபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில், கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் ரோகித் ஷர்மா, பும்ரா என இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
'ரன் மிஷின்' என்றழைக்கப்படும் கோலி இந்த லிஸ்டில் இடம்பெறவில்லை. அதேபோல், இங்கிலாந்து அணி உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்த ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மிரட்டலாக பந்து வீசிய நியூசிலாந்தின் ஃபெர்க்குசன், ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் ஆகியோரை ஐசிசி தேர்வு செய்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் அனைவரையும் சர்ப்ரைஸ் செய்த வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப்-அல்-ஹசன் இடம்பிடித்துள்ளார். விக்கெட் கீப்பராக ஆஸியின் அலெக்ஸ் கெரி அணியில் தேர்வாகியுள்ளார். இப்பட்டியலில், நியூசிலாந்தின் 'யார்க்கர்' மன்னனான டிரெண்ட் போல்ட் 12ஆவது வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
10 அணிகள் பங்கேற்ற உலகக்கோப்பைத் தொடரில் ஐந்து அணிகளில் இருந்தே வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணியில் இருந்து ஒரு வீரர் கூட இடம்பிடிக்க வில்லை.
-
Your #CWC19 Team of the Tournament! pic.twitter.com/6Y474dQiqZ
— ICC (@ICC) July 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Your #CWC19 Team of the Tournament! pic.twitter.com/6Y474dQiqZ
— ICC (@ICC) July 15, 2019Your #CWC19 Team of the Tournament! pic.twitter.com/6Y474dQiqZ
— ICC (@ICC) July 15, 2019
ஐசிசியின் கனவு அணி
- கேன் வில்லியம்சன் (கேப்டன்) - 578 ரன்கள்
- ரோகித் ஷர்மா - 648 ரன்கள்
- ஜேசன் ராய் - 443 ரன்கள்
- ஜோ ரூட் - 556 ரன்கள்
- ஷகிப் - 606 ரன்கள், 11 விக்கெட்டுகள்
- பென் ஸ்டோக்ஸ் - 465 ரன்கள், 7 விக்கெட்டுகள்
- அலெக்ஸ் கெரி - 375 ரன்கள், 19 டிஸ்மிசஸ்
- மிட்சல் ஸ்டார்க் - 27 விக்கெட்டுகள்
- டிரெண்ட் போல்ட் - 17 விக்கெட்டுகள்
- ஆர்ச்சர் - 20 விக்கெட்டுகள்
- பும்ரா - 18 விக்கெட்டுகள்
- லொக்கு ஃபெர்குசன் - 21 விக்கெட்டுகள்