ETV Bharat / sports

'ஒருநாள் போட்டியில் மன அழுத்தத்தை எதிர்கொள்வதே சவால்' - விராட் கோலி! - உலகக்கோப்பை

மும்பை: "உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் விளையாடும்போது ஏற்படும் அழுத்தங்களை எதிர்கொள்வதுதான் முக்கியமானது" என, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி
author img

By

Published : May 22, 2019, 12:41 PM IST

2019ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மே 30ஆம் தேதி தொடங்க உள்ளது. அதில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் இன்று இங்கிலாந்து சென்றனர். அதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, "உலகக்கோப்பை தொடரின்போது சூழ்நிலைகளைத் தாண்டி வீரர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை கையாள்வதுதான் முக்கியமானது" என்றார்.

இந்திய அணி வலுவாகவும், சிறந்த வீரர்களுடனும் உள்ளது. இங்கிலாந்து மைதானங்களின் பிட்ச்கள் நிச்சயம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், என்றார்.

குல்தீப் யாதவ் மனநிலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, குல்தீப் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார். ஐபிஎல் தொடர் தொடங்குவத்ற்கு முன்பாகவே இதனைப் பற்றியெல்லாம் அணி நிர்வாகம் சார்பாக கூறப்பட்டுவிட்டது. ஒவ்வொரு போட்டியிலும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடனும், இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேச அணியுடம் விளையாடவுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.