ETV Bharat / sports

27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து!

27 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து அணி.

27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டியில் நுழையும் இங்கிலாந்து
author img

By

Published : Jul 12, 2019, 1:40 PM IST

பர்மிங்ஹாம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிபடுத்திய இங்கிலாந்து அணி, வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி பர்மிங்ஹாமிலுள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின.

இதையடுத்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய்-இன் அதிரடியால் 32.1 ஓவர்களிலேயே வெற்றிக்கான இலக்கை எட்டியது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதற்கு முன் இங்கிலாந்து அணி 1992ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டி வரை சென்றது. அப்போது 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து தோல்வியடைந்தது.

இதனையடுத்து நடைபெற்று முடிந்த 6 உலகக்கோப்பை தொடர்களுக்கு பிறகு, தற்போது இறுதிப்போட்டியில் விளையாட இருக்கிறது.

மேலும் படிக்க: உலகக்கோப்பை கனவை நனவாக்குமா இங்கிலாந்து அணி?

அதே போல் ஆஸ்திரேலியா அணி முதல் முறையாக உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. அந்த அணி இதற்கு முன் பங்கேற்ற(1975, 1987, 1996, 1999, 2003, 2007 மற்றும் 2015) ஏழு அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இம்முறை முதல் முறையாக உலகக்கோப்பையை வெற்றி பெறாத இரு அணிகளான நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டியில் மோதவுள்ளன.

உலகக் கோப்பை இறுதிப்போட்டி லண்டனிலுள்ள லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ளது.

Intro:Body:Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.