ETV Bharat / sports

மீண்டும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை!

இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆடம் சாம்பா பந்தை சேதப்படுத்தியதாக வெளியான புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆடம் ஜாம்பா
author img

By

Published : Jun 10, 2019, 5:11 PM IST

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சந்தித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பாக அதிகபட்சமாக ஷிகர் தவான் 117 ரன்களையும் விராட் கோலி 82 ரன்களையும் குவித்தனர். அதிரடியாக விளையாடிய ஹர்த்திக் பாண்டியா 27 பந்துகளில் 4 பவுண்ரிகள் 3 சிக்சர்களுடன் 48 ரன்களையும் குவித்து அசத்தினார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களின் முடிவில் 316 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்ததால் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ஸ்மித் 69 ரன்களையும் வார்னர் 56 ரன்களையும் எடுத்தனர்.

இந்த போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பந்து வீசிய ஆஸ்திரேலியாவின் ஆடம் சாம்பா, சந்தேகிக்கும் வகையில் பந்தை கையாண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆடம் சாம்பா பந்தை சேதப்படுத்தினாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் ஆட்ட நடுவர்கள் இதுகுறித்து புகார் தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் இதுபற்றி வெளியான புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி சாம்பாவின் செயலுக்கு விளக்கம் தர வேணடும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ZAMPA
ரசிகரின் ட்வீட்

இதுகுறித்து ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச்சிடம் கேட்டபோது "நான் இதுவரை அந்த புகைப்படங்களை பார்க்காததால் என்னால் அது பற்றி கருத்து கூற முடியாது. ஆனால் சாம்பா எப்போதும் ஹேண்ட் வார்மர்களை வைத்திருப்பார் என்பது எனக்கு தெரியும்." என்று கூறினார்.

ஆஸ்திரேலியா வரும் 12ஆம் தேதி தனது அடுத்த லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது .

Intro:Body:

Did Adam zampa tampers ball - finch clarifies

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.