ETV Bharat / sports

பேட்ஸ்மேன்களின் சொர்க்கமான ட்ரெண்ட் பிரிட்ஜில் வெ.இண்டீஸை சமாளிக்குமா பாக்.,?

நாட்டிங்ஹாம்: உலகக்கோப்பை தொடரின் இரண்டாம் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.

west
author img

By

Published : May 31, 2019, 8:52 AM IST

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. இதன் இரண்டாம் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி மோதுகிறது.

west
ஹோல்டர்

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலேயே 421 ரன்களை குவித்து உலகக்கோப்பையில் எந்த மாதிரியான ஆட்டத்தை ஆட காத்திருக்கிறோம் என டிரைலர் காட்டிவிட்டது. அதுவும் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக பார்க்கப்படும் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஆட்டம் நடைபெறவுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டத்தை ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

அதிரடிக்கு கெய்ல், லூவிஸ்... நிதானத்துக்கு ஹோப், டேரன் பிராவோ... கட்டமைப்பதற்கு ஹெட்மயர்... கடைசி ஓவர்களில் வெளுத்து வாங்குவதற்கு ரஸல். ஹோல்டர் என பக்கா பேக்கேஜாக வந்திறங்கியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் படை. பந்துவீச்சிலும் கீமார் ரோச், நர்ஸ், ஒஷானே தாமஸ் என எந்நிலைக்கும் பஞ்சமில்லாமல் கலந்துகட்ட காத்திருக்கிறார்கள்.

west
சர்ஃபராஸ் அஹ்மத்

அதேபோல் 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் பாகிஸ்தான் அணி விளையாடிய 32 ஒருநாள் போட்டிகளில் 21 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளதால் பாகிஸ்தான் அணியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பாபர் அசாம் எனும் அசாத்திய வீரர். பாபர் அசாமின் ஆட்டத்தைப் பொறுத்தே பாகிஸ்தான் அணியின் வெற்றி நிர்ணயிக்கப்படும். மாலிக், சர்ஃபராஸ் அஹமத் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கை கட்டுப்படுத்த ஆமிர், ஹசன் அலி, ரியாஸ், ஆசிஃப் அலி, சடாப் கான் ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பாபர் அசாம்
பாபர் அசாம்

உலகக்கோப்பை தொடரில் இதுவரை இரு அணியினரும் விளையாடிய 10 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழு போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. வரலாறுகள் எப்படி இருந்தால் என்ன... அவை படைக்கப்படுவதே உடைப்பதற்குத்தானே! பாகிஸ்தான் அணி தங்களின் வரலாற்றை மாற்றுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Intro:Body:

CWC19 - WI vs Pak Preview

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.