கரோனா வைரசால் உலகின் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, அனைத்துவிதமான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்களும் தங்களது சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்துவருகின்றனர்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் தனது சமூக வலைதளப் பதிவுகளை ட்ரோல் செய்துவரும், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை தன்னுடைய அனைத்து சமூக வலைதளப் பக்கங்களிலிருந்தும் முற்றிலுமாக நீக்குவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து கெயில் கூறுகையில், "நான் சாஹலைப் பற்றி டிக் டாக்கிடம் முறையிடப் போகிறேன். அவர் சமூக ஊடகத்தில் உள்ளவர்களை மிகவும் எரிச்சலூட்டுகிறார். மேலும் அவர் இப்போதே சமூக வலைதளங்களை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் நான் என்னுடைய அனைத்து பக்கங்களிலிருந்தும் நீக்குகிறேன். உன்னைப் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
சக கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது சமூக ஊடக நடவடிக்கைகளுக்காக சாஹலை சுட்டிக்காட்டுவது இது முதல் முறை அல்ல; இதற்கு முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸுடனான நேரலையின்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சாஹலை ஒரு கோமாளி என்று சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்த இந்திய வீரருக்கு பந்துவீசுவதுதான் கடினம்: பட் கம்மின்ஸ்!