ETV Bharat / sports

நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் என்ட்ரி தந்த ஆஸி...

author img

By

Published : Mar 2, 2020, 3:51 PM IST

மெல்போர்னில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 18ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

Women's T20 WC: Megan Schutt, Georgia Wareham lead Australia to semifinal

ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில், இன்று மெல்போர்னில் நடைபெற்ற இந்தத் தொடரின் 18ஆவது போட்டியில் குரூப் ஏ பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்துடன் மோதியது.

இவ்விரு அணிகளும் இந்தத் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என தலா நான்கு புள்ளிகளை எடுத்திருந்தது. இதனால், இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், இப்போட்டி இரண்டு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டியாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, தொடக்க வீராங்கனை பெத் மூனியின் சிறப்பான பேட்டிங்கால் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அன்னா பீட்டர்சன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின், 156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபக்கம் நியூசிலாந்து வீராங்கனை கேட்டி மார்டின் அதிரடியாக விளையாடினார்.

இதையடுத்து, நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆஷ்லி கார்ட்னர் வீசிய கடைசி ஓவரில் கேட்டி மார்டினால் 15 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இறுதியில், நியூசிலாந்து அணி இப்போட்டியில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கேட்டி மார்டின் 18 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மேகன் ஷூட் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இதையும் படிங்க: கெத்தா நடந்துவர்றான்...! - சென்னையில் 'தல தோனி'யின் தரிசனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.