ETV Bharat / sports

ஏழு அணிகள் கொண்ட மகளிர் ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கும் - அஞ்சும் சோப்ரா!

author img

By

Published : Apr 27, 2020, 10:49 AM IST

மகளிர் ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கப்படும் என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Women's IPL is in progression stage: Anjum Chopra

நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, மகளிருக்கான ஐபிஎல் தொடர் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளர்.

இது குறித்து அவர் கூறுகையில், "மகளிர் ஐபிஎல் தொடர் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். மேலும் கடந்தாண்டு நான்கு அணிகளைக் கொண்டு நடைபெற்ற இத்தொடர் தற்போது ஏழு அணிகளைக் கொண்டு நடைபெறும். அதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

அஞ்சும் சோப்ரா
அஞ்சும் சோப்ரா

இந்தாண்டு உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் மகளிர் ஐபிஎல் தொடர் போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும். ஏனெனில் வெற்றியாளருக்கும், இரண்டாமிடத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

மேலும் அப்போட்டியில் இந்தியா வென்றிருந்தால் அது மகளிர் கிரிக்கெட்டை வேறு ஒரு கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஏதுவாக அமைந்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:என்னுடைய வளர்ச்சிக்கு காரணம் டிராவிட் தான்- விஜய் சங்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.