ETV Bharat / sports

கெயில் சாதனையை பறக்கவிடுவாரா ஹிட்மேன்? - Gayle

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயிலின் சாதனையை இந்திய வீரர் ரோகித் ஷர்மா முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கெயில் சாதனையை பறக்கவிடுவாரா ஹிட்மேன்?
author img

By

Published : Aug 3, 2019, 9:53 AM IST

இந்திய கிரிக்கெட் அணியில் ஹிட்மேன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ரோகித் ஷர்மா. 2013 சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்குப் பிறகு இவரது கிரிக்கெட் பயணம் அதீத வளர்ச்சி அடைந்துள்ளது. அந்தத் தொடரிலிருந்து அவர் ஒருநாள், டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கி அசத்திவருகிறார். குறிப்பாக, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஐந்து சதங்களை அடித்து புதிய சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று ஃபுளோரிடாவில் நடைபெறவுள்ளது.இப்போட்டியில், ரோகித் ஷர்மா நான்கு சிக்சர்களை பறக்கவிட்டால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வெஸ்ட் இண்டீஸின் கெயின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

Rohit Sharma
ஹிட்மேன் ரோகித் ஷர்மா

இதனால், இன்றைய போட்டியில் இவர் இச்சாதனையை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை 94 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய ரோகித் ஷர்மா 102 சிக்சர்களை விளாசி அதிக சிக்சர்கள் அடித்தவர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

சர்வதேச டி20 அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள்

  1. கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) - 105
  2. மார்டின் கப்தில் (நியூசிலாந்து) - 103
  3. ரோகித் ஷர்மா (இந்தியா) - 102

அதேசமயம், இந்திய அணியில் ரோகித் ஷர்மா - கோலி இருவருக்கும் இடையே பிரச்னை உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என கோலி செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, 'நான் அணிக்காக விளையாடவில்லை நாட்டிற்காகதான் விளையாடுகிறேன்' என ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.