இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள சென்ரல் ப்ரோவர்ட் ரிஜினல் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 'டக்வத் லூயிஸ்' முறையில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 51 பந்துகளில் 67 ரன்களை எடுத்தார். இதன்மூலம் சர்வதேச டி20 தொடரில் அதிக சிக்சர் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார். ரோஹித் சர்மா தற்போது 107 சிக்சர்களுடன் முதலிடத்திலும், கிறிஸ் கெயில் 105 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் கப்தில் 103 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
முன்னதாக, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா 5 சதங்களுடன் 648 ரன்கள் எடுத்து ஒரு உலகக்கோப்பையில் அதிக சதங்களை எடுத்த வீரர் என்ற பெயரை பெற்றார்.