இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிவம் தூபே, ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிவம் தூபே 54 ரன்களை எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணித் தரப்பில் ஹெய்டன் வால்ஷ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்கவீரரகள் சிம்மன்ஸ், லிவிஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் விக்கெட்டிற்கு 73 ரன்களைச் சேர்த்தது.
லிவிஸ் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மையரும் 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
-
West Indies take it to a decider 💪
— ICC (@ICC) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Lendl Simmons played the key role with the bat, smashing 67* off 45 balls. He just loves playing India in must-win games!#INDvWI 👇 https://t.co/my4qd2mVoZ pic.twitter.com/GWcPxDftXj
">West Indies take it to a decider 💪
— ICC (@ICC) December 8, 2019
Lendl Simmons played the key role with the bat, smashing 67* off 45 balls. He just loves playing India in must-win games!#INDvWI 👇 https://t.co/my4qd2mVoZ pic.twitter.com/GWcPxDftXjWest Indies take it to a decider 💪
— ICC (@ICC) December 8, 2019
Lendl Simmons played the key role with the bat, smashing 67* off 45 balls. He just loves playing India in must-win games!#INDvWI 👇 https://t.co/my4qd2mVoZ pic.twitter.com/GWcPxDftXj
மறுமுனையில் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த சிம்மன்ஸ் அரை சதமடித்து அசத்தினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களிலேயே 173 ரன்களை எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி சமன் செய்துள்ளது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய சிம்மன்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: மீண்டும் இங்கிலாந்து அணிக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நட்சத்திரங்கள்!