ETV Bharat / sports

சாதனைப் படைத்த வெஸ்ட் இண்டீஸ் ஓபனர்கள்!

டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் 382 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

டப்ளின்
author img

By

Published : May 5, 2019, 8:05 PM IST

அயர்லாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இன்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸை பேட்டிங் ஆடப் பணித்தது.

பின்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான் கேம்ப்பெல் - ஷாய் ஹோப் இணை, தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடியது. இவர்களது விக்கெட்டை எடுக்க முடியாமல் அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் திக்குமுக்காடினர்.

ஷாய் ஹோப்
ஷாய் ஹோப்

30 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 195 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க வீரர்கள், பின்னர் அதிரடி ஆட்டத்துக்கு மாறினர். இதனையடுத்து ஷாய் ஹோப் 112 பந்துகளில் தனது ஐந்தாவது சதத்தைப் பதிவு செய்தார். தொடர்ந்து கேம்ப்பெல் 99 பந்துகளில் முதல் சதமடிக்க, அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது.

43ஆவது ஓவரின்போது விக்கெட் இழப்பின்றி 307 ரன்கள் எடுத்த இந்த இணை, அதிக ரன்கள் எடுத்த தொடக்க கூட்டணி என்ற சாதனையைப் படைத்தது. இதனையடுத்து இருவீரர்களும் 150 ரன்களைக் கடந்தனர்.

ஜான் கேம்ப்பெல்
ஜான் கேம்ப்பெல்

சிறப்பாக ஆடி வந்த கேம்ப்பெல் 137 பந்துகளில் 179 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மெக்கார்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஹோப் 152 பந்துகளில் 170 ரன்கள் எடுத்து இருவரும் அடுத்ததுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 381 ரன்கள் எடுத்தது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.