உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு டி20 போட்டிகளும் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெறவுள்ளது.
இதில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பொல்லார்ட், சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் ஏராளமான டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளதால்தான் அவர்களை அணியில் தேர்ந்தெடுத்தோம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடைக்கால தேர்வுக் குழுத் தலைவர் ராபர்ட் ஹைன்ஸ் தெரிவித்துள்ளார்.
-
BREAKING: WEST INDIES SQUAD RELEASED FOR 1ST AND 2ND T20I vs INDIA IN FLORIDA. #ItsOurGame pic.twitter.com/gGU5Gde77E
— Windies Cricket (@windiescricket) July 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">BREAKING: WEST INDIES SQUAD RELEASED FOR 1ST AND 2ND T20I vs INDIA IN FLORIDA. #ItsOurGame pic.twitter.com/gGU5Gde77E
— Windies Cricket (@windiescricket) July 22, 2019BREAKING: WEST INDIES SQUAD RELEASED FOR 1ST AND 2ND T20I vs INDIA IN FLORIDA. #ItsOurGame pic.twitter.com/gGU5Gde77E
— Windies Cricket (@windiescricket) July 22, 2019
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: கார்லோஸ் பிராத்வெயிட், ஜான் கேம்பல், எவின் லெவிஸ், ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், பொல்லார்ட், ரோவ்மன் பாவெல், கீமோ பால், சுனில் நரேன், காட்ரல், ஓஷானே தாமஸ், அந்தோணி பிராம்பிள், ஆன்ட்ரே ரஸல், காரி பியர்ஸ்
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.